- தமிழ்நாடு முழுவதும் இன்று 12,480 ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக் காட்சி வாயிலாக பங்கேற்பு.
- தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் முன்ஜாமின் கோரி மீண்டும் மனு தாக்கல். உயர்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வழக்கு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.91,400-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.11,425-க்கும் விற்பனை. வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து கிராம் 187 ரூபாய் என்ற உச்ச விலையை எட்டியது.
- இலங்கை கடற்படை சிறைபிடித்த ராமேஸ்வரம் மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க வலியுறுத்தி, இன்று முதல் அப்பகுதி மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்.
- நீலகிரி மாவட்டத்திற்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலெர்ட் விடுத்தது சென்னை வானிலை ஆய்வு மையம். திருப்பூர், திண்டுக்கல், தேனி, மதுரை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் எனவும் தகவல்.
- ரயில்களில் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசு உள்ளிட்ட பொருட்களை எடுத்துச் சென்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என தெற்கு ரயில்வே எச்சரிக்கை.
- இந்தியாவின் மனநல தூதராக நடிகை தீபிகா படுகோனை நியமித்தது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம். அனைவரும் ஒன்றிணைந்தால் மனநலம் நிறைந்த இந்தியாவை உருவாக்க முடியும் என எக்ஸ் தளத்தில் தீபிகா படுகோன் பதிவு.
- அரசுமுறைப் பயணமாக இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
- அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற வெனிசுலாவின் மரியா கொரினா மச்சாடோ, தனது விருதை வெனிசுலாவின் துன்பப்படும் மக்களுக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்கும் அர்ப்பணிப்பதாக அறிவித்துள்ளார்.
- மரியா தன்னிடம் தொலைபேசியில் பேசியதாகவும், அவரிடம் விருதை தான் கேட்கவில்லை என்றும் கூறியுள்ள ட்ரம்ப், விருது கிடைக்காவிட்டாலும் லட்சக்கணக்கான மக்களின் உயிர்களை காப்பாற்றியதில் மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ளார்.
- நவம்பர் 1-ம் தேதி முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கு கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவின் முக்கிய மென்பொருள் ஏற்றுமதியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் மிரட்டல்.
- மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டை சதத்தை தவறவிட்டார் ஜெய்ஷ்வால். 175 ரன்கள் எடுத்திருந்தபோது துரதிஷ்டவசமாக ரன் ஆவுட் ஆகி வெளியேறினார்.
Top 10 News Headlines: தாறுமாறாக எகிறும் வெள்ளி விலை, மனநல தூதரானார் தீபிகா படுகோன், நோபல் பரிசு-ட்ரம்ப் பதில் - 11 மணி செய்திகள்
ஸ்ரீராம் ஆராவமுதன் | 11 Oct 2025 11:04 AM (IST)
Top 10 News Headlines Today Oct. 11th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.
11 மணி தலைப்புச் செய்திகள்
NEXT PREV
Published at: 11 Oct 2025 11:01 AM (IST)