• ஒரே நாளில் இலங்கை கடற்படையினரல் கைது செய்யப்பட்ட 47 மீனவர்களை விடுவிக்க இலங்கை அரசிடம் மத்திய அரசு வலியுறுத்த முதலமைச்சர் கோரிக்கை.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைவு. சவரனுக்கு ரூ.1,320 குறைந்த நிலையில், ஒரு கிராம் ரூ.11,260-க்கும், ஒரு சவரன் ரூ.90,080-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாறாக, வெள்ளி விலை கிராமிற்கு 3 ரூபாய் உயர்ந்து 180 ரூபாய் என்ற உச்ச விலையை தொட்டது.
  • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணயையை எதிர்த்து தவெக தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
  • கரூர் சம்பவத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி, நெரிசலில் உயிரிழந்த 13 வயது சிறுவனின் தந்தை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை.
  • தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதிக்குள் தொடங்க சாதகமான சூழல் நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணிப்பு.
  • கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்துள்ளதால், தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களில் சமையல் கேஸ் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது.
  • ஆதார் திட்டத்தில் உயர் பொறுப்பு வகிக்கும் இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலகேனியை சந்தித்தார் பிரிட்டன் பிரதமர் ஸ்டார்மர். பிரிட்டனிலும் ஆதார் போன்ற டிஜிட்டல் ஐ.டி-யை கொண்டு வருவது குறித்து ஆலோசனை.
  • போட்டி கட்சிகள், வேட்பாளர்களுக்கு எதிராக ஏஐ பயன்படுத்தும் போது, வழிகாட்டு நெறிகளை கட்டாயம் பின்பற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல். பிற கட்சியினரை விமர்சிப்பது தவிர்க்கப்பட வேண்டும் எனவும் உத்தரவு.
  • பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான 51 வேட்பாளர்கள் கொண்ட முதற்கட்ட பட்டியலை நேற்று ஜன் சுராஜ் கட்சி வெளியிட்ட நிலையில், 2-வது பட்டியலில் பிரசாந்த் கிஷோரின் பெயர் இடம்பெறும் என தகவல்.
  • காஸா அமைதி ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, உடனடியாக போர் நிறுத்தம் அமலுக்கு வந்ததாக கூறப்படுகிறது.
  • அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்படும் நிலையில், அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
  • டெல்லியில் நடைபெறும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்து வருகிறது.

 

Continues below advertisement

Continues below advertisement