• இந்தியா எந்த ஒரு தனிப்பட்ட கலாசாரம், கொள்கைக்கு மட்டும் சொந்தமானது அல்ல, அனைத்து மக்களுக்குமானது என அரசியல் அமைப்பு தினத்தை ஒட்டி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதிவு.
  • தவெக-வில் செங்கோட்டையன் இணைய உள்ளதாகவும், அனுபவம் கொண்டவர்கள் விஜய்யின் கட்சிக்கு செல்வதால் அவர் இன்னும் வலிமையானவராக மாறுவார் என்றும் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் தெரிவித்துள்ளார்.
  • புதுச்சேரியில் டிசம்பர் 5-ம் தேதி விஜய்யின் ரோடு ஷோவிற்கு அனுமதி கேட்டு டிஜிபியிடம் தவெக சார்பில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. உப்பளம், சோனாம்பாளையம் வாட்டர் டேங்க் அருகே விஜய் உரையாற்றுவார் என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர திருத்தத்திற்கான விண்ணப் படிவங்கள் 96.65 சதவீதம் விநியோகிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தகவல். 58.70 சதவீத கணக்கெடுப்பு படிவங்கள் மின்னணு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.640 அதிகரித்துள்ளது. ஒரு கிராம் ரூ.11,800-க்கும், ஒரு சவரன் ரூ.94,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில், ஆருத்ரா கோல் நிறுவன மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறன்றனர்.
  • மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது ‘சென்யார்‘ புயல். இந்த புயலல் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.
  • கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி தொடங்கிய போதே, முதலமைச்சர் பஞ்சாயத்தும் தொடங்கியது. இந்நிலையில், சித்தராமையாவிற்கு மாற்றாக டி.கே. சிவகுமார் விரைவில் முதலமைச்சராவார் என்று ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் மீண்டும் உறுதி.
  • அருணாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெண் சீனாவின் ஷாங்காய் விமான நிலையத்தில் அந்நாட்டு குடியேற்ற அதிகாரிகள் நடத்திய விதம் அதிர்ச்சி அளிப்பதாகவும், இன ரீதியாக கேலி செய்தது மிகவும் கொடூரமானது என்றும் அருணாச்சலப் பிரதேச முதலமைச்சர் பெமா காண்டு கடும் கண்டனம்.
  • உலக அளவில், ஒவ்வொரு 10 நிமிடங்களுக்கும் ஒரு பெண், தனது தாய், தந்தை, உடன் பிறந்தோர், மாமன் போன்ற நெருங்கிய உறவினர்களால் கொல்லப்படுவதாக ஐ.நா அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது.

 

Continues below advertisement

 

Continues below advertisement