Top 10 News Headlines: செங்கோட்டையன் ஆலோசனை, அஜித் வேண்டுகோள், UPSC-யின் புதிய திட்டம் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today Nov 1st: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

நாற்றுப் பண்ணையை முதல்வர் திறந்து வைத்தார்
சென்னை கிண்டியில் நாற்றுப் பண்ணையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கிண்டி ரயில் நிலையம் அருகே 118 ஏக்கரில் சுற்றுச்சூழல் பூங்கா வளாகத்தில் நாற்றுப் பண்ணை அமைப்பு; நாற்றுப் பண்ணையில் மருத்துவ தாவரங்கள், மலர் செடிகள் உள்ளிட்டவை விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. கிண்டி நாற்றுப் பண்ணையில் ஒரு செடி ரூ.15 முதல் ரூ.1,500 வரை விற்பனை செய்யப்படவுள்ளது.
இபிஎஸ் புகைப்படம் மறைப்பு
கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின்
கட்சி அலுவலகத்தின் பேனரிலிருந்த எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம் மறைப்பு.
அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டையன் ஆலோசனை
ஈரோடு கோபிசெட்டிபாளையத்தில் தனது ஆதரவாளர்களுடன் செங்கோட்டையன் ஆலோசனை கோபிசெட்டிபாளையத்தில் உள்ள செங்கோட்டையன் வீட்டுக்கு ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் வருகை. அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கி கட்சியின் பொதுச்செயலர் கே.பழனிசாமி நேற்று அறிவிப்பு
ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள்
"திரையரங்கு உரிமையாளர்கள் பல லட்சங்கள் செலவு செய்து, தியேட்டரை புதுப்பிக்கிறார்கள். கொண்டாட்டம் என்ற பெயரில் உள்ளே பட்டாசுகள் வெடிப்பது, இருக்கைகளை உடைப்பது, Once More கேட்டு திரையை கிழிப்பது இவை அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் "
- நடிகர் அஜித் வேதனை
யுபிஎஸ்சி-யின் புதிய திட்டம்
போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் பார்வை குறைபாடுடைய தேர்வர்களுக்கு ஏற்படும் நடைமுறைச் சிக்கல்களை போக்கும் வகையில் பிரத்யேக திரை வாசிப்பு மென்பொருளை UPSC திட்டம்.
அதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை, உரிய ஆய்வுகளுக்குப் பிறகு போட்டித் தேர்வுகளில் இந்த மென்பொருள் பயன்பாடு உறுதிபடுத்தப்படும் என UPSC தெரிவிப்பு.
பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரிப்பு
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்க வரி விதிப்பின் எதிரொலியாக பிற நாடுகளுக்கான இந்திய ஏற்றுமதி அதிகரித்ததாக ஒன்றிய வர்த்தக அமைச்சகம் தகவல். கடந்த ஜனவரி-செப். வரை இந்திய கடல்சார் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு ரூ.42,866 கோடியை எட்டியது இது கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 15.6% அதிகம். ஜவுளி ஏற்றுமதி 1.23%, ஆபரணங்கள் ஏற்றுமதி 1.24% ஏற்றம் கண்டுள்ளன. UAE, வியட்நாம், பெல்ஜியம், சவுதி அரேபியா போன்ற நாளுகளுக்கு ஏற்றுமதி அதிகரிப்பு
வணிக சிலிண்டர் விலை குறைப்பு
சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ சிலிண்டர் விலை ரூ.4.50 குறைந்து ரூ.1,750க்கு விற்பனை. சமையல் பயன்பாட்டிற்கான 14.2 கிலோ சிலிண்டர் விலை மாற்றமின்றி ரூ.868.50க்கு விற்பனை
பணம் சம்பாதிக்க புதிய ரூட்
பிரான்ஸ்: திருமண செலவுக்கான பணத்தை திரட்ட தனது உடையில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் லோகோக்களை பதித்து கவனத்தை ஈர்த்துள்ளார் டகோபர்ட் ரெனோப் என்ற இளைஞர்!
26 ஸ்டார்ட் அப் நிறுவனங்களை விளம்பரம் செய்யும் வகையில் அவர்களிடம் இருந்து பணம் பெற்றுக்கொண்டு இவ்வாறு செய்துள்ளார். இவரின் இந்த யோசனையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.
இந்தியா - தென்னாப்ரிக்கா மோதும் ஃபைனல்
ஐசிசி மகளிர் உலகக் கோப்பை இறுதிபோட்டி நவிமும்பையில் நாளை நடைபெற உள்ளது. இதில் இந்தியா மற்றும் தென்னாப்ரிக்கா அணிகள் பலப்பரிட்சை நடத்த உள்ளன. இரு அணிகளுமே இதுவரை கோப்பையை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
விஸ்வநாதன் ஆனந்த் கோப்பை
FIDE உலக செஸ் கோப்பையின் ஓப்பன் பிரிவு வெற்றியாளர் கோப்பைக்கு ‘விஸ்வநாதன் ஆனந்த்'
கோப்பை என பெயர் சூட்டப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் செஸ் போட்டியை பிரபலப்படுத்தியதில் விஸ்வநாதன் ஆனந்த் முக்கிய பங்கு வகித்தது குறிப்பிடத்தக்கது.





















