மேலும் அறிய

Top 10 Headlines: மின்வெட்டால் தவிக்கும் தமிழ்நாடு.. சுங்கக்கட்டணம் உயர்வு.. 11 மணி வரை நடந்த நிகழ்வுகள்!

Top 10 News Headlines Today May 23th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

  • கோவையில் 10 வயது சிறுமி, கடத்தி கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. இச்சம்பவத்திற்கு உண்மையான நீதி வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
  • திருச்சியில் தவறான சிகிச்சை காரணமாக நர்சிங் மாணவி சீதாலட்சுமி  பலியானதாக குற்றஞ்சாட்டி அவரது உறவினர்களும் சக நர்சிங் மாணவிகளும் அரசு தலைமை மருத்துவமனை முன்பு குவிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக அமைச்சர் ரமேஷ் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். 
  • கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாட்டு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த விவசாயி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விவசாயி உடம்பில் 10 குண்டுகள் பாய்ந்த நிலையில் பாலவிடுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • அக்னி நட்சத்திரம் காரணமாக கடந்த சில நாட்களாக சென்னையில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், இன்றைய நாளில்  வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது. இதமான காற்று வீசுவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.
  • தமிழகம் முழுவதும் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. ரூ.25 முதல் ரூ.100 வரை சுங்க கட்டணம் உயர்ந்துள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  •  தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டால் பொதுமக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். மின்வெட்டு குறித்து அதிகாரிகளுடன் அமைச்சர் நிர்மல்குமார் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.
  • சென்னையில் பெட்ரோல் 82 காசுகள் உயர்ந்ததால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். ஒரு லிட்டர் ரூ.105.31-க்கு விற்பனையாகிறது. ஒரு லிட்டர் டீசல் 87 காசுகள் உயர்ந்து ரூ.96.98-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 
  • எரிசக்தி ஏற்றுமதியை அதிகரிக்க இந்திய அதிகாரிகளுடன் பேச்சு நடத்த திட்டம் - அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இன்று கொல்கத்தா வருகை தருகிறார்.

  • இந்திய அணியின் ஆல் ரவுண்டர் விஜய் சங்கர் அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் 12 ஒருநாள், 9 டி20 மற்றும் 78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ளார். 
  • டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் வரதட்சணைக் கொடுமையால் 24 வயது பெண்  மூன்றாவது மாடியில் இருந்து தள்ளிவிட்டு கொலை - பெண்ணின் கணவர், மாமனார், மாமியார் உள்ளிட்டோர் கைது
  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் இளநிலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு வரும் 25 ஆம் தேதி காலை 10 மணி முதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • காக்ரோச் ஜனதா பார்ட்டி  என இணையத்தில் தொடங்கப்பட்ட கட்சி பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதனை உருவாக்கிய அபிஜித் திப்கேவின் பெற்றோர் மகன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக அச்சமடைந்துள்ளனர். 
  • சிபிஎஸ்இ மும்மொழி கொள்கையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரணை நடைபெறுகிறது. 

Advertisement

தலைப்பு செய்திகள்

இரவு 9 மணிக்கு டீம் கால்; திட்டவட்டமாக மறுத்த Gen Z ஊழியர்- இணையத்தில் வைரலாகும் விவாதம்
இரவு 9 மணிக்கு டீம் கால்; திட்டவட்டமாக மறுத்த Gen Z ஊழியர்- இணையத்தில் வைரலாகும் விவாதம்
வேலையில் சேர்ந்த 6 மாதங்களில் ரூ.15,000 பெறலாம்; மத்திய அரசின் ELI திட்டம் என்ன?
வேலையில் சேர்ந்த 6 மாதங்களில் ரூ.15,000 பெறலாம்; மத்திய அரசின் ELI திட்டம் என்ன?
சபரிமலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி? முழு நிர்வாகமும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்!
சபரிமலையில் ரொக்க பரிவர்த்தனைக்கு முற்றுப்புள்ளி? முழு நிர்வாகமும் டிஜிட்டல் மயமாக்க திட்டம்!
‘ஐயப்பனுக்கு அபிஷேக நெய்யிலும் ஊழலா?’ – சபரிமலை முறைகேட்டில் நீதிமன்றம் கடும் கண்டனம்.
‘ஐயப்பனுக்கு அபிஷேக நெய்யிலும் ஊழலா?’ – சபரிமலை முறைகேட்டில் நீதிமன்றம் கடும் கண்டனம்.
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Pink Police Booth : தமிழகத்திலேயே முதன்முறை! 24 மணி நேர கண்காணிப்பு..பொன்னேரியில் போலீஸ் பிங்க் பூத்
Caste Certificate Issue : அதிகாரிகள் அலட்சியம். ஊசலாடும் ராணுவ பணி கனவு? குடுகுடுப்பைகாரர் மகன் வேதனை!
Srivaikuntam TVK issue :
Kerala Baby: நடுரோட்டில் கைக்குழந்தை!அதிவேகத்தில் வந்த பேருந்து..நடத்துநர் மாஸ் சம்பவம்
TVK MLA Govt School | மகளுக்கு அரசுப் பள்ளியில் அட்மிஷன் ஆச்சர்யப்படுத்திய தவெக MLA வைரல் வீடியோ!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Time to Lead : ’அதிமுகவை கைப்பற்றும் டிடிவி தினகரன்’ பொதுச்செயலாளர் ஆகிறாரா..?
’அதிமுகவை கைப்பற்றும் TTV தினகரன்’ பொதுச்செயலாளர் ?
Duraimurugan : ’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
’அவமதிக்கப்பட்டாரா துரைமுருகன்’? மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிக்கு செல்லாமல் திரும்பினார்…!
DMK Alliance : ‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ கூட்டணியில் இருந்து வெளியேறும் வைகோ..?
‘மு.க.ஸ்டாலினுக்கு அடுத்தடுத்து துரோகம்’ வெளியேறும் வைகோ..?
TVK ADMK : ”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
”விஜய் அண்ணா சனிக்கிழமைன்னா வந்து ஆள் புடிச்சிட்டு போயிட்றாங்க” ஆர்.பி. உதயகுமார் வேதனை
DMK TVK:
"48 வயசு குழந்தையை தூக்கி சுமக்கும் ஸ்டாலின்" பெண் MLA-விற்காக களமிறங்கிய தவெக பாய்ஸ்
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
தவெகவுக்கு தாவிய விஜயதரணி; காங். டூ பாஜக டூ TVK- காய் நகர்த்திய காரணம்!
DMK: சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
சாதி, மத வாக்கு வங்கியை இழந்த திமுக..! மேலும் 3 பேரை நியமிக்க ஸ்டாலின் திட்டம் - அறிவாலய கணக்கு?
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
ஆவின் பச்சைப் பால் விற்பனை ரத்து? மக்களை கடுமையாக பாதிக்கும்- அன்புமணி ஆவேசம்
Embed widget