Top 10 News Headlines: ரூ.12,800 கோடி முதலீடு, டூரிஸ்ட் ஃபேமிலியை பாராட்டிய எஸ்.எஸ். ராஜமவுலி- டாப் 10 செய்திகள்
Top 10 News Headlines Today May 20: இந்தியா முழுவதும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

மாணவிகளை சந்தித்த முதலமைச்சர்
சென்னை, ராணி மேரி கல்லூரி வளாகத்தில் உயர்கல்வித் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள வகுப்பறைக் கட்டடங்கள், ஆய்வகக் கட்டடங்கள், பணிமனைகள், விடுதிக் கட்டடங்க உள்ளிட்டவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்து ஆய்வு செய்தார். மேலும் ரூ.207.82 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள கட்டடங்களுக்கும் அடிக்கல் நாட்டினார். மேலும் மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.
சரிந்த தங்கம் விலை
ஆபரண தங்கதின் விலை நேற்று ரூ.280 அதிகரித்த நிலையில், இன்று 360 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, ஆபரண தங்கத்தின் விலை சவரன் 69 ஆயிரத்து 860 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் விலை 45 ரூபாய் குறைந்து 8 ஆயிரத்து 710 ரூபாய்க்கு சரிந்துள்ளது.
மதுரையில் 3 பேர் உயிரிழப்பு
மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்ததில், அம்மா பிள்ளை (65), வெங்கட்டி (55), வீரமணி (10) ஆகிய மூவர் உயிரிழப்பு. மழையால் ஏற்பட்ட மின்தடையால் வீட்டின் வாசலில் அமர்ந்து 3 பேரும் பேசிக்கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டதாக போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தகவல்
நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 8,000 கன அடியாக அதிகரிப்பு. நேற்று மாலை வினாடிக்கு 5,000 கன அடியாக நீர் வந்து கொண்டிருந்த நிலையில் இன்று அதிகரித்துள்ளது
ரூ.12,800 கோடி முதலீடு
பிரபல ஃபாக்ஸ்கான் நிறுவனம் கடந்த ஐந்தே நாட்களில் மட்டும் இந்தியாவில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதில் தமிழ்நாட்டிற்கான முதலீடும் அடங்கும். இதன் மூலம் ஐபோன்களை அதிகளவில் இந்தியாவில் தயாரிக்க ஆப்பிள் நிறுவனம் திட்டம்.
டூரிஸ்ட் ஃபேமிலியை பாராட்டிய எஸ்.எஸ். ராஜமவுலி
“டூரிஸ்ட் ஃபேமிலி எனும் அற்புதமான படத்தை பார்த்தேன். நகைச்சுவையுடன் மனதை நெகிழ வைக்கும் வகையிலும், தொடக்கத்தில் இருந்து முடிவு வரை ஆர்வத்தை தூண்டும் வகையிலும் இருந்தது. அபிஷன் ஜீவிந்தின் எழுத்து, இயக்கம் சிறப்பாக இருந்தது. சமீபத்திய ஆண்டுகளில் மிகச்சிறந்த திரைப்பட அனுபவத்தை அளித்தமைக்கு நன்றி. இந்த படத்தை தவற விடாதீர்கள்" - இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி
ஆளுநர் மாளிகையில் திருடு போன ஆவணங்கள்
தெலங்கானா ஆளுநர் மாளிகையில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் முக்கிய ஆவணங்கள், 4 ஹார்ட் டிஸ்குகளை திருடிச் சென்றதால் அதிர்ச்சி. கடந்த 14ம் தேதி ஹைதராபாத் ராஜ்பவன் வளாகத்தில் உள்ள சுதர்மா பவனில் பொருட்கள் கலைந்து கிடந்ததால் சிசிடிவி காட்சிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததில் திருடு போனது கண்டுபிடிப்பு. இச்சம்பவம் தொடர்பாக ராஜ்பவன் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை
அதிகரிக்க தொடங்கிய கொரோனா
சிங்கப்பூர், ஹாங்காங்கில் மீண்டும் அதிகரிக்க தொடங்கிய கொரோனா தொற்று. இந்தியாவில் கட்டுக்குள் உள்ளதாக ஒன்றிய சுகாதாரத்துறை அறிக்கை. நேற்றைய நிலவரப்படி 257 பேர் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆனால், அனைவருக்கும் லேசான பாதிப்புகளே உள்ளதாகவும் கண்காணிப்பு பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளதாகவும் விளக்கம்
திக்வேஷ் ரதி ஒரு போட்டியில் விளையாடத் தடை
SRH வீரர் அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திவிட்டு NOTEBOOK கொண்டாட்டம் செய்தது மற்றும் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதற்காக லக்னோ பந்துவீச்சாளர்| திக்வேஷ் ரதி, அடுத்த போட்டியில் விளையாடத் தடை. |மேலும், போட்டிக்கான ஊதியத்தில் 50% அபராதம் விதிப்பு. அபிஷேக் சர்மாவுக்கும் 25% அபராதம் விதித்துள்ளது ஐபிஎல் நிர்வாகம்
ஐபிஎல் - இன்றைய போட்டி
ஐபிஎல் தொடரின் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோத உள்ளன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது. இரு அணிகளும் பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்ததால், இந்த போட்டியின் முடிவுகள் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.





















