• தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தைக்கு கூட்டணிக் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தது திமுக. திமுக-வின் கூட்டணி பங்கீடு பெரும்பாலும் நிறைவடைந்த நிலையில், திமுக வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியாகும் என்று எதிர்பார்ப்பு.

  • திமுக கூட்டணியில் 175 தொகுதிகளில் உதயசூரியன் போட்டியிடும் என அறிவிப்பு.
  • அதிமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. முதற்கட்டமாக 23 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டார் கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி.

  • சட்டமன்ற தேர்தலுக்கான பரப்புரையை திருவாரூரில் நாளை தொடங்குகிறார் மு.க.ஸ்டாலின். மயிலாப்பூரில் எடப்பாடி பழனிசாமி இன்று பரப்புரையை தொடங்குகிறார்.

  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,08,800-க்கு விற்பனை. ஒரு கிராம் ரூ.13,600-க்கு விற்பனை.
  • ஈரானின் சபஹார் துறைமுக திட்டத்திற்கு இனி எந்த கூடுதல் நிதியுதவியும் வழங்கப்படாது என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
  • குஜராத் சட்டப்பேரவையில் பொது சிவில் சட்ட மசோதா நிறைவேற்றம். இதன்மூலம், திருமணம், விவாகரத்து, வாரிசு உரிமை மற்றும் லிவ்-இன் உறவுகள் ஆகியவற்றுக்கு மதம் கடந்து பொதுவான விதிகள் அமல்படுத்தப்பட உள்ளன.
  • மத்திய கிழக்கு போரை முடிவுக்க கொண்டுவர மத்தியஸ்தம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது பாகிஸ்தான்.
  • ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தலைமையிலான குழு 15 அம்ச திட்டத்துடன் விரைவில் பாகிஸ்தான் செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல்.
  • ஈரானுடன் அமெரிக்கா நடத்தும் அமைதிப் பேச்சுவார்த்தையில், தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என இஸ்ரேல் அரசு அறிவிப்பு.
  • எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளது பிலிப்பைன்ஸ் அரசு. மத்திய கிழக்கு போரால் பெட்ரேல், டீசலின் விலை அந்நாட்டில் இருமடங்கு அதிகரித்ததால் நடவடிக்கை.
  • AI வீடியோ உருவாக்கும் செயலியான Sora-வை மூடுவதாக OpenAI அறிவிப்பு.