Top 10 News Headlines: முதலமைச்சரை சந்தித்த அன்புமணி, அமைச்சருக்கு ஷாக், ட்ரம்ப் வார்னிங் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines Today June 9th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இன்று முதல் சிங்கப் பெண் அதிரடி பிரிவு
பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைக்கிறார். பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் இந்த சிறப்பு பிரிவு செயல்பட உள்ளது.
உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1040 கூடி ரூ.1,13,600க்கு விற்பனை.ஒரு கிராம் மீது 130 ரூபாய் அதிகரித்து 14 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை.
எதிராக அமைச்சருக்கு தவெக வேட்பாளர் புகார்
கிள்ளியூர் MLAவும், காங். அமைச்சருமான ராஜேஷ்குமாரின் வெற்றி செல்லாததாக அறிவிக்க வேண்டும் என மாநில, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு கடிதம் அனுப்பிய கிள்ளியூர் தவெக வேட்பாளர் சபின். ராஜேஷின் வெற்றியில் முறைகேடு நடந்ததாகவும், விரைவில் நீதிமன்றத்தை நாடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரை சந்தித்த அன்புமணி
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி 2 எம்எல்ஏக்கள் மற்றும் பாமக நிர்வாகிகளுடன் சந்திப்பு. தமிழ்நாட்டில் சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க கோரி முதலமைச்சர் விஜயுடன் பாமக தலைவர் அன்புமணி சந்திப்பு
சாலை விபத்தில் கர்ப்பிணி பலி
அரவக்குறிச்சி: ஈசநத்தம் பிரிவு ரோடு அருகே பைக் மீது மோதாமல் இருக்க, காரை திருப்பியபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், லாரி மீது மோதிய விபத்தில் கர்ப்பிணிப் பெண் உட்பட 3 பேர் உயிரிழப்பு. இருசக்கர வாகனத்தில் வந்த நபர், காரில் இருந்த இருந்த 3வயது 3வயது சிறுமி மருத்துவமனையில் அனுமதி - போலீஸ் விசாரணை.
புதியதாக 3 அமைச்சர்கள்
புதுச்சேரி அமைச்சரவையில் மேலும் 3 புதிய அமைச்சர்களுக்கு ஒன்றிய அரசு அனுமதி
ராஜவேலு, ராஜசேகரன், சிவக்கொழுந்து ஆகியோர் ஜூன் 17ம் தேதி அமைச்சர்களாகப் பதவியேற்கின்றனர்.
ஷாக் தந்த மத்திய அரசு
உஜ்வாலா திட்டத்தில் மானிய விலையில் ஆண்டுதோறும் வழங்கும் வீட்டு சிலிண்டர் எண்ணிக்கையை 9லிருந்து 4-ஆக குறைத்த மத்திய அரசு; சாமானிய மக்கள் அதிர்ச்சி.
கடந்தாண்டு இதே எண்ணிக்கை 12லிருந்து 9 ஆக குறைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேதன்யாகுவிற்கு ட்ரம்ப் எச்சரிக்கை
ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால் தனித்து விடப்படுவீர்கள் என
நெதன்யாகுவுக்கு அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை. இஸ்ரேல் மீதான தாக்குதலை தற்காலிகமாக நிறுத்தவதாக அறிவித்த ஈரான், லெபனானை தாக்கினால் மீண்டும் தாக்குவோம் என்றும் எச்சரிக்கை.
லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் தேர்தலில் தமிழ் வம்சாவளி பெண்
அமெரிக்கா: லாஸ் ஏஞ்சல்ஸ் மேயருக்கான முதற்கட்ட தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த நித்யா ராமன் 28.55% வாக்குகளுடன் 2ம் இடத்துக்கு முன்னேற்றம். தற்போதைய மேயர் பாஸ் 34.32% வாக்குகளுடன் முதலிடம். முதற்கட்ட தேர்தலில் எந்த வேட்பாளரும் 50% வாக்குகள் |பெறவில்லை என்றால் முதல் 2 இடங்களை பிடிப்பவர்கள் நவம்பரில் நடைபெறும் இறுதிக்கட்ட தேர்தலில் போட்டியிடுவார்கள்.
அர்ஜுன் டெண்டுல்கர் அசத்தல்
டி20 மும்பை லீக் தொடரில், பந்தாரா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கு எதிரான போட்டியில் ARCS அந்தேரி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி.. ARCS அந்தேரி அணி வீரர் அர்ஜுன் டெண்டுல்கர் 3 ஓவர்கள் வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தியும், பேட்டிங்கில் 34 பந்துகளில் 66 ரன்கள் விளாசியும் அசத்தல் - ஆட்டநாயகன் விருதையும் வென்றார்
Before You Go
"அனாதையா நிக்கிறோம் வீட்டை இடிச்சா எங்க போவோம்" கள்ளக்குறிச்சியில் கதறி அழும் பெண்கள்
ட்ரெண்டிங் செய்திகள்























