மேலும் அறிய
Top 10 News Headlines: ராகுலை சாடிய திமுக.. தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. 11 மணி வரை இன்று!
Top 10 News Headlines Today June 6th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

இந்தியா செய்திகள்
Source : ABP
- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த சம்பவம் எடப்பாடி பழனிசாமியை அதிரவைத்துள்ளது.
- பாஜகவில் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை இடையே மோதல். அண்ணாமலையின் விலகல் பாஜகவின் உட்கட்சி பிளவை காட்டுகிறது என திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
- மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் மணிமுத்தாறு அருவியில் 2வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் இன்று ரூ.1,840 குறைந்து ஒரு சவரன் ரூ.1,13,600க்கு விற்பனையாகிறது. ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,840க்கு குறைந்துள்ளது நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.
- சென்னையில் நடைபெரும் முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கும் விழாவில் 300 போலீசாருக்கு பதக்கங்களை வழங்கி காவல் ஆணையர் அமல்ராஜ் கௌரவித்தார்.
- டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை காக்ரோச் ஜனதா கட்சி போராட்டம் நடத்த டெல்லி போலீஸ் அனுமதியளித்த நிலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி தொடக்கம். இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.
- பிரக்ஞானந்தா முதல் முறையாக நார்வே செஸ் தொடரில் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார். இதன்மூலம் புதிய உச்சம் தொட்ட அவருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
- சென்னையில், திருட்டு மற்றும் வழிப்பறி சம்பவங்களைத் தடுக்க கோயம்பேடு காவல் நிலைய போலீசார் ட்ரோன் கேமரா மூலம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
- அரசியல் கட்சி தொடங்கும் முன் இயக்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்த அண்ணாமலை - ஒரே நாளில் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்தனர்.
- திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கடந்த 3 நாட்களாக மின்தடை ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் டார்ச் வெளிச்சத்தில் சென்ற பக்தர்களுக்கு போலீசார் உதவினர்
- முதலமைச்சர் விஜய் அறிவித்தபடி 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். மேலும் பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- கர்நாடகா அரசை மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம். அதற்கான பணிகளை முதலமைச்சர் விஜய் மேற்கொள்வார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
- தென்மேற்கு பருவமழையால் கேரளத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வயநாட்டில் இருநாட்கள் சுற்றுலா மையங்கள், ஹோம் ஸ்டே, ரிசார்ட்டை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அங்கு செயல்படும் குவாரிகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
Also Read: Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Before You Go
Mamata banerjee slaps man | ”ஏய்... ஓரமா போ” தொண்டரை அறைந்த மம்தா! ஷாக்கான கட்சியினர்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















