மேலும் அறிய

Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று

Top 10 News Headlines Today June 2nd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

தமிழ்நாடு அரசு உத்தரவு

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் மெட்ரிக் பள்ளிகளும் கல்விக் கட்டணத்தை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் மற்றும் பெற்றோர் தெரிந்துகொள்ளும் வகையில் கட்டண விவகாரத்தை காட்சிப்பலகையில் காட்சிப்படுத்தவும் தமிழ்நாடு அரசு உத்தரவு

கனிமொழி கண்டனம்

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகே தவெக நிர்வாகிகள் இருவரால் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவத்திற்கு கனிமொழி எம்.பி. கண்டனம்.
“தேர்தல் காலத்தை போலவே திமுகவின் மீது பழி போடுவதை நிறுத்திவிட்டு, ஆளுங்கட்சி நீங்கள்தான் என்பதை உணர்ந்து பொறுப்புடன் முதலமைச்சர் விஜய் செயல்படப்போவது எப்போது?" - கனிமொழி

முதலமைச்சருக்கு கேள்வி

தமிழ்நாட்டை கஜா புயல், வர்தா புயல், தானே புயல், சுனாமி போன்ற பேரிடர்கள் தாக்கியபோது விஜய் தம்பி எங்கே இருந்தீர்கள்? மாங்காய் பறித்துக் கொண்டு இருந்தீர்களா தம்பி?
-ஆர்.பி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர்

தவெகவுக்கு பாதுகாப்பு

“அமைச்சரவையில் விசிக பங்கு பெற்றால்தான் இந்த ஆட்சிக்கு பாதுகாப்பு என தவெக கருதியதால் அமைச்சரவையில் பங்கு பெற்றோம். திருச்சி கிழக்கில் நான் போட்டியிடமாட்டேன் என முதலமைச்சர் விஜயிடம் உறுதிபட கூறிவிட்டேன்” -விசிக தலைவர் திருமாவளவன் விளக்கம்

தி.மு.கவிடம் ஆதரவு கோர பா.ஜ.க திட்டம்.!

தொகுதி மறுவரையறை மசோதா, ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா ஆகியவற்றை நிறைவேற்ற தி.மு.கவிடம் பேச்சுவார்த்தை நடத்த பா.ஜ.க திட்டம் எனத் தகவல். சட்டமன்ற தேர்தலுக்குப் பின் இண்டியா கூட்டணியிலிருந்து தி.மு.க தனித்துவிடப்பட்டுள்ள நிலையில், அக்கட்சியின் ஆதரவை பெறுவதில் பா.ஜ.க தீவிரம்

நீதிபதிகள் இன்று பதவியேற்பு

தமிழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் மோகனா உட்பட 5 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இன்று பதவியேற்கின்றனர். 5 புதிய நீதிபதிகளுக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

மேலும் சரிந்த ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு மீண்டும் வீழ்ச்சி. ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 94 ரூபாய் 94 காசுகளிலிருந்து, 95 ரூபாய் 20 காசுகளாக வீழ்ச்சியடைந்தது.

ட்ரம்ப் அதிருப்தி

ஈரான் உடனான அமைதி பேச்சுவார்த்தைக்கு மத்தியில் லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதற்கு நேதன்யாகுவிற்கு ட்ரம்ப் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். தொலைபேசி உரையாடலின் போது, “தேவையில்லாமல் பிரச்னையை தீவிரப்படுத்துவதாகவும், தான் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் சிறையில் இருந்து இருப்பீர்கள்” என்றும் நேதன்யாகுவை ட்ரம்ப் எச்சரித்துள்ளாராம்.

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
இந்தியா கூட்டணி கூட்டத்திலேயே காங்கிரஸை பொளந்த திருமாவளவன்; விழிபிதுங்கிய ராகுல் - நடந்தது என்ன?
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Train Ticket Booking: மாற்றம் பெறும் டிக்கெட் முன்பதிவு.. ரயில் பயணிகளுக்கு இனிப்பான செய்தி!
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Top 10 News Headlines: வட இந்தியாவில் சூரிய வெடிப்பு.. யூட்யூபர் மாரிதாஸ் கைது.. 11 மணி வரை நடந்தது என்ன?
Musk on India Birth Rate: இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
இந்தியாவின் பிறப்பு விகிதம் குறைவு.! 10 ஆண்டுகளில் வரலாறு காணாத சரிவு; எலான் மஸ்க் கவலை
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Dindigul TVK | ”மா.செ-வை உடனே மாத்துங்க” தவெகவில் கோஷ்டி பூசல்! அமைச்சரை சந்திப்பதில் சண்டை
Perambur murder | துண்டு துண்டாக கிடந்த கணவர்!உள்ளாடையால் சிக்கிய மனைவி!கள்ளக்காதலனுடன் சதித்திட்டம்
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
போன், நெட் வசதிக்கு நோ, ஜூன் 21 தனிமை: நீட் தேர்வு வினாத்தாள் குழுவுக்கு டைட் செக்யூரிட்டி!
Masoud Pezeshkian: 'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
'நாங்கள் பின்வாங்க மாட்டோம்' அச்சுறுத்தல்களுக்கு எதிராக நாட்டை பாதுகாப்போம் - ஈரான் அதிபர் சூளுரை
Minister Nirmal Kumar: மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
மின்வாரிய ஊழியர்களுக்கு ஜாக்பாட்.! பதவி உயர்வு, ஆள் சேர்ப்பு - அமைச்சர் வெளியிட்ட சூப்பர் அறிவிப்புகள்
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
’’வெட்கமா இல்லையா விஜய் அரசே? தினமும் ஸ்டிக்கர் ஒட்டுவதை நிறுத்து’’ வெளுத்துவாங்கும் திமுக!
Trump Warns Israel Iran: “இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
“இஸ்ரேலும், ஈரானும் தாக்குதல்களை உடனே நிறுத்த வேண்டும்“ - ட்ரம்ப்பின் லேட்டஸ்ட் எச்சரிக்கை
Seeman on Maridhas Arrest : ’அதிகார திமிரின் உச்சம்' மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
’அதிகார திமிரின் உச்சம் – அரசியல் பழிவாங்கல்’ மாரிதாஸூக்காக பொங்கி எழுந்த சீமான்..!
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
Anbumani: திருவான்மியூர்- உத்தண்டி உயர்மட்ட பால ஒப்பந்தம் ரத்து? சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடுக- அன்புமணி
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
IND vs AFG: அபாரம்.. அபாரம்! இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி! ஆப்கானை சுருட்டி வீசிய இந்தியா
Embed widget