• தமிழ்நாட்டில் மாம்பழ விலை வீழ்ச்சியை ஈடுசெய்ய, சந்தை தலையீட்டு திட்டத்தை செயல்படுத்தக் கோரி, பிரதமர் மோடி, மத்திய வேளாண் அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்.
  • வேலூரில் முதல்வர் திறக்க இருப்பது மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையா? இல்லை விளம்பரக் கட்டடமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி.
  • முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில், பெரியார், அண்ணா ஆகிய இருபெரும் தலைவர்களை விமர்சித்து இந்து முன்னணி வீடியோ வெளியிட்டது கடும் கண்டனத்திற்குரியது என ஓபிஎஸ் அறிக்கை.
  • போதைப் பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், நடிகர் கிருஷ்ணாவை கைது செய்ய போலீசாரால் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் சவரனுக்கு ரூ.680 குறைந்தது. ஒரு கிராம் ரூ.9,070-க்கும், ஒரு சவரன் ரூ.72,560-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
  • 84 ஆண்டுகளுக்குப் பிறகு கிருஷ்ணராஜ சாகர் அணையிலிருந்து 30,000 கனஅடி நீர் திறப்பு. கபினி அணையிலிருந்தும் 12,000 கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில், தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு.
  • மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கான விமான சேவைகளை மீண்டும் தொடங்கியது ஏர் இந்தியா நிறுவனம்.
  • இஸ்ரேல், ஈரான் போர் ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில், சில மணி நேரங்களிலேயே அதை மீறியதாக ட்ரம்ப் ஆவேசமான நிலையில், அதை பொருட்படுத்தாமல், ஈரான் மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளது.
  • ஆக்சியம்-4 திட்டத்தில் ராக்கெட் செயல்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாகவும், ராக்கெட்டை ஏவுவதற்கு வானிலையும் சாதகமான சூழலில் இருப்பதால், இன்று நண்பகல் 12.01 மணிக்கு ராக்கெட் விண்ணில் செலுத்த தயார் நிலையில் உள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் அறிவிப்பு.
  • ஆஸ்ட்ராவா கோல்டன் ஸ்பைக் சர்வதேச தடகள போட்டியில் ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் சாம்பியன் பட்டம் வென்றார் இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா.