• சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி, கூட்டணி கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்த குழு அமைத்தது திமுக. எம்.பி டி.ஆர். பாலு தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைப்பு.
  • சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுக உடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்தது மதிமுக.
  • அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கும் ’மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம்’ தேர்தல் பரப்புரை, சென்னையை அடுத்த ஆவடி, அம்பத்தூர் தொகுதிகளில் இன்று மாலை நடைபெறுகிறது.
  • திருச்சியில் நாம் தமிழர் கட்சியின் சார்பில், மாற்றத்தை விரும்பும் மக்களின் மாநாடு சீமான் தலைமையில் இன்று நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்கள் ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்பட உள்ளனர்.
  • சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,080 உயர்ந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு ரூ.260 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,680-க்கும் ஒரு சவரன் ரூ.1,17,440-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலை கிராமிற்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.290-க்கு விற்பனை.
  • ஆந்திர மாநில அரசு துறைகளில் ஏஐ பயன்பாட்டை அதிகரிக்க உள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. டெல்லி ஏஐ மாநாட்டை அதிகாரிகளுடன் நேரில் பார்வையிட்ட பின் தகவல்.
  • ஏஐ மாநாட்டால் 250 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் அறிவிப்பு. சுமார் 20 பில்லியன் டாலர்கள் மதிப்பிலான தொழில்நுட்ப முதலீடுகளும் வர உள்ளதாக தகவல்.
  • உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விதித்த பரஸ்பர வரிகள் சட்டவிரோதமானது எனக்கூறி, அதனை அதிரடியாக ரத்து செய்தது அமெரிக்க உச்சநீதிமன்றம்.
  • அமெரிக்க உச்சநீதிமன்ற தீர்ப்பால், இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தத்தில் எந்த மாற்றமும் இல்லை என ட்ரம்ப் அறிவிப்பு. மேலும், இந்த தீர்ப்பை அடுத்து, அனைத்து நாடுகளுக்கும் 10% வரி விதிப்பதாக ட்ரம்ப் அறிவித்த நிலையில், இந்தியா மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் 18%-லிருந்து 10%-ஆக குறைந்தது.
  • உலகிலேயே மிக அதிக சொத்து மதிப்பு கொண்டவராக உயர்ந்தார் அமெரிக்காவின் எலான் மஸ்க். நடப்பு மாதத்தில் அவரது சொத்து மதிப்பு 852 பில்லியன் டாலர்களாக அதிகரிப்பு.
  • டி20 உலகக் கோப்பை தொடரில் இன்று சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. முதல் போட்டியில் நியூசிலந்து - பாகிஸ்தான் அணிகள் மோதல். நாளை இந்தியா - தென்னாப்பிரிக்கா போட்டி நடைபெறுகிறது.

 

Continues below advertisement

 

Continues below advertisement