மேலும் அறிய
Top 10 News Headlines: “தேர்தலுக்குப்பின் இபிஎஸ் தான் முதல்வர்“, தங்கம் வெள்ளி விலை குறைவு, தேர்தல் ஆணையம் நூதன பிரசாரம் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Feb.16th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை தாக்கலாக உள்ள நிலையில், தமிழ்நாட்டின் 2வது பொருளாதார அறிக்கை இன்று வெளியாகிறது.
- "NDA கூட்டணியில் சேர்ந்த எல்லாருமே பஞ்சரான டயர்கள்.. இன்னொரு பக்கம் யாருக்கும் எந்த பயனும் இல்லாமல் கொள்கைனா என்னன்னே தெரியாம ஒரு கோஷ்டி சுத்திகிட்டு இருக்கு..." இ.பி.எஸ் மற்றும் விஜயை கடுமையாக விமர்சித்த உதயநிதி ஸ்டாலின்.
- தேர்தல் முடிந்ததும் இபிஎஸ் தான் முதல்வர் என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் திட்டவட்டம்.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,15,520-க்கு விற்பனை. வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.15 குறைந்து, ஒரு கிராம் ரூ.265-க்கு விற்பனை.
- கடலூர் எழுத்தூரில், ஜல்லி ஏற்றிச்சென்ற லாரியின் பின்புறம் கார் மோதியதில் சென்னையை சேர்ந்த 3 பேர் பலி படுகாயங்களுடன் மீட்கப்பட்ட கிரி என்ற நபர் ஆபத்தான நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதி.
- கோவை சிங்காநல்லூர் அருகே, நகை அடகுக் கடையின் ஷட்டரை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் மற்றும் 20 கிலோ வெள்ளி கொள்ளை.
- தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதி மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
- கேரளாவில் சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்து உடல் உறுப்புகளை தானம் செய்த 10 மாதக் குழந்தை ஆலின் ஷெரின் ஆபிரகாமின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது.
- டி20 உலகக் கோப்பை லீக் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணிக்கு தேர்தல் ஆணையம் வாழ்த்து. கிரிக்கெட்டில் எப்படி ஒவ்வொரு ரன்னும் முக்கியமோ அதுபோல் தான் ஜனநாயகத்திற்கு ஒவ்வொரு ஓட்டும் முக்கியம், படிவம் 6-ஐ நிரப்பி உங்களின் வாக்களிக்கும் உரிமையை இன்றே பதிவு செய்யுங்கள்! என நூதன பிரசாரம்.
- டெல்லியில் செயற்கை நுண்ணணுவு தாக்க உச்சி மாநாட்டை இன்று மாலை 5 மணிக்கு தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி. 5 நாட்கள் நடைபெறும் மாநாட்டில், 20 நாடுகளின் தலைவர்கள், 40 சிஇஓ-க்கள், 3500 நிபுணர்கள் பங்கேற்பு.
- இன்று மும்பை வருகிறார் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான். நாளை பிரதமர் மோடியை சந்திக்கும் அவர், இருநாட்டின் வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























