மேலும் அறிய
Top 10 News Headlines: ஹாஃப் பாயில் சாப்பிட வேண்டாம்-அமைச்சர், குறைந்த தங்கம் விலை, ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Feb.10th: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழ்நாட்டில் இன்றுடன் எஸ்.ஐ.ஆர். பணிகள் நிறைவு.
- சேலத்தில் பிப்.14ஆம் தேதி உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்.
- பறவை காய்ச்சல் பாதிப்பு மனிதர்களுக்கு தொற்றாது என கூறியுள்ள அமைச்சர் மா. சுப்பிரமணியன், மக்கள் ஹாஃப் பாயில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது என அறிவுறுத்தியுள்ளார்.
- ஜனநாயகன் பட சென்சார் வழக்கை வாபஸ் பெற படத் தயாரிப்பு நிறுவனத்ற்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை.
- தேச பாதுகாப்பு திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டியதால் ஓசூரில் விமான நிலையம் அமைக்க பரிந்துரைக்கப்படவில்லை என்று மத்திய அமைச்சர் ராம்மோகன் தெரிவித்துள்ளார்.
- நாடாளுமன்ற மக்களவையில் பிரதமரை யாராவத தாக்க திட்டமிட்டிருந்தால் FIR பதிவு செய்ய வேண்டியததானே என கேட்டு, சபாநாயகர் ஓம் பிர்லா உடனான சந்திப்பிற்குப் பின் ராகுல் காந்தி பேட்டி.
- இந்தியாவுடன் ரஷ்யா வைத்துள்ள வர்த்தக, ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சி செய்வதாக ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் குற்றம்சாட்டியுள்ளார்.
- இனி அமெரிக்க பொதுத் தேர்தல்களின் போது, வாக்காளர் அடையாள அட்டை காண்பிப்பது அவசியம் என்றும், இமெயில் மூலம் இனி வாக்களிக்க முடியாது என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
- ஈரானுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டாம், உடனடியாக தாக்குதல் நடத்த வேண்டும் என கோரி வீடியோ வெளியிட்டு ஈரானிய இளைஞர் தற்கொலை செய்துகொண்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement






















