முதல்வர் வலியுறுத்தல் அமெரிக்காவின் 50% வரியால் தமிழ்நாட்டின் ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. திருப்பூரில் மட்டும் ரூ.3,000 கோடி ஆயத்த ஆடை வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. ஆயிரக் கணக்கானோர் வேலையிழக்கும் அபாயம் உள்ளது பொருளாதாரத்தில் அடிப்படை கட்டமைப்பு சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். திருப்பூர் ஆயத்த ஆடை ஏற்றுமதியாளர்களுக்கு சலுகைகள் வழங்கி ஊக்குவிக்க வேண்டும். தொழில்கள் மற்றும் தொழிலாளர்களை பாதுகாக்கவும், அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும் ஒன்றிய அரசை மீண்டும் வலியுறுத்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் பதிவு பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கு நீட்டிப்பு!

இந்திய ஜவுளித் துறைக்கு உதவியாக பருத்தி மீதான இறக்குமதி வரி விலக்கை டிச.31ம் தேதி வரை நீட்டித்து ஒன்றிய அரசு உத்தரவு.தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கோரிக்கையை ஏற்று செப்.30 வரை பருத்திக்கு வரி விலக்கு அளித்திருந்த ஒன்றிய அரசு, அமெரிக்காவின் 50% வரி அமலுக்கு வந்ததால், உத்தரவை இந்தாண்டு இறுதி வரை நீட்டித்தது.

மெட்ரோ டிக்கெட் கோளாறு

சென்னை மெட்ரோ ரயிலுக்கான வாட்ஸ்அப் ஆன்லைன் டிக்கெட் வாங்குவதில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், வாட்ஸ்அப் சாட்பாட் தற்காலிகமாக வேலை செய்யவில்லை எனவும் மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. CMRL மொபைல் செயலி, Paytm, phonepe, Singara Chennai Card, CMRL பயண அட்டைகள் போன்ற பிற முறைகள் மூலம் டிக்கெட்டுகளைப் பெற்றுக்கொள்ளுமாறு சென்னை மெட்ரோ நிர்வாகம் வேண்டுகோள்.

வேலைவாய்ப்பில் தமிழ்நாடு No.1

நாட்டின் மொத்த உற்பத்தித் துறை வேலைவாய்ப்பில் 15% பங்களிப்புடன் தமிழ்நாடு முதலிடம். மத்திய அரசு வெளியிட்ட, 2023-24ம் ஆண்டிற்கான வருடாந்திர தொழில் கணக்கெடுப்பு (ASI) முடிவுகளின் படி, இப்பட்டியலில் குஜராத் (13%), மகாராஷ்டிரா (13%), உத்தரப் பிரதேசம் (8%), கர்நாடகா (6%) அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

இந்தியா மீது வரி: ஜனநாயகக் கட்சி கண்டனம்!

“ரஷ்ய எண்ணெயை வாங்குவதில், இந்தியாவை மட்டும் குறிவைப்பது ஏற்புடையது அல்ல. உண்மையில் சீனா மீது வரி விதிப்பதற்குப் பதிலாக, இந்தியாவுக்கு வரி விதித்து அமெரிக்கர்களையும் புண்படுத்தி, இருநாடுகளின் உறவையும் ட்ரம்ப் நாசம் செய்கிறார்” இந்தியா மீதான 50% வரி விதிப்புக்கு, அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற வெளியுறவுக் குழு கண்டனம்.

வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் Al!

AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த தொடங்கிய துறைகளில், 22-25 வயதுடையவர்களுக்கான வேலை வாய்ப்புகள் 13% வரை குறைந்துள்ளதாக ஸ்டான்ஃபோர்டு பல்கலை.யின் ஆய்வில் தகவல். சாஃப்ட்வேர் டெவலப்பர் துறையில் மட்டும், 2022ம் ஆண்டு முதல் தொடக்க நிலை வேலை வாய்ப்புகளில் 20% குறைந்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

வேலை நேரத்தை உயர்த்த திட்டம்!

மகாராஷ்டிராவில் தனியார் நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் உள்ள வேலை நேரத்தை 9லிருந்து 10 மணி நேரமாக உயர்த்த அம்மாநில அரசு பரிசீலனை.அவசர வேலைகளுக்கு, ஒரு நாளைக்கான அதிகபட்ச வேலை நேரம் 12 மணிநேரமாக இருப்பதை நீக்கவும் திட்டம்.

தமிழர்கள் குடும்பத்துடன் உயிரிழப்பு

சத்தீஸ்கர்: ஜகல்பூரில் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூரைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு.டர்பந்தனா என்ற பகுதியில் காரில் பயணித்த 4 பேரும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

'இந்தியாவுக்கு ஒரு வாய்ப்பு..

ரஷ்ய எண்ணெயை வாங்குவதை நிறுத்தினால், இந்தியா மீதான வரியை 25% வரை குறைப்போம் என அமெரிக்க வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ அறிவிப்புஇந்தியா மீதான 50% வரி விதிப்பு நேற்று (ஆக.27) முதல் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

விட்டுக்கொடுக்க முடியாது

“கச்சத்தீவை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது; தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், யதார்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்”கடல்வளத்தை பாதுகாக்க சர்வதேச சட்டங்கள் உள்ளன; விதிமீறல், எல்லை தாண்டுவதால் இந்திய மீனவர்கள் மீது கைது நடவடிக்கை - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் விஜித ஹேரத் கொழும்புவில் பேட்டி