முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம்

“முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் வெற்றியால், பல மாநிலங்கள், நாடுகள் இத்திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளன. கனடா போன்ற நாடுகளுக்கெல்லாம் முன்னோடியாக நாம் இருக்கிறோம் என்பதுதான் நமக்கு பெருமை” -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

முருங்கை இலைப் பொடியை சேர்க்க கோரிக்கை

“மாணவர்கள் உணவுத் திட்டத்தில் தினசரி ஒரு ஸ்பூன் முருங்கை இலைப் பொடியை சேர்க்க வேண்டும் என முதலமைச்சரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். ரத்தசோகையை இதன் மூலம் தடுக்க முடியும் குழந்தைகள் நலமே, நாட்டின் வளம்” முதலமைச்சரின் காலை உணவுத் திட்ட விரிவாக்க நிகழ்ச்சியில் உலக சுகாதார நிறுவன முன்னாள் தலைமை விஞ்ஞானி மருத்துவர் சௌமியா சுவாமிநாதன் கோரிக்கை

நடிகை ஸ்ரீதேவியின் சொத்தை அபகரிக்க முயற்சி?

மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்துக்கு 3 பேர் உரிமை கோருவதாக, கணவர் போனி கபூர் சென்னை உயர் நீதிமன்றம் வழக்குசென்னை கிழக்கு கடற்கரை சாலையில் 1998-இல் நடிகை ஸ்ரீதேவி வாங்கிய சொத்தை அபகரிக்க முயல்வதாக வழக்கு; மோசடியாக பெற்ற வாரிசு சான்றிதழ் மூலம் உரிமை கோருவதாக போனி கபூர் தொடர்ந்த வழக்கில் தாம்பரம் தாசில்தார் 4 வாரங்களில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

மாருதியின் பேட்டரி ஆலை

அகமதாபாத்தில் மாருதி சுசூகி நிறுவன மின்சார கார் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட உள்ள "இ-விட்டாரா" மின்சார கார்கள் தயாரிக்கப்பட உள்ளதாக தகவல்.

அமித் ஷாவிற்கு கெஜ்ரிவால் கேள்வி

ஒருவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, பின்னர் அவர் விடுவிக்கப்பட்டால், அவர் மீது பொய் வழக்குப் பதிவு செய்த அமைச்சருக்கு எத்தனை ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்று அமித்ஷாவுக்கு டெல்லி முன்னாள் முதலமைச்சர் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்

"பஞ்சாப்பிலும் காலை உணவுத் திட்டம்- பரிசீலனை”

எங்கள் மாநிலத்திலும் காலை உணவுத் திட்டத்தை தொடங்க பரிசீலிக்கிறேன் பள்ளி மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம் வழங்குவது மிகவும் சிறப்பானது. மாணவர்களின் உடல்நிலையை முன்னேற்ற காலை உணவுத் திட்டம் நடைமுறைப்படுத்துவது நல்ல விஷயம் - பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

இந்தியப் பொருட்களுக்கு நாளை முதல் 50% வரி - அமெரிக்கா நோட்டீஸ்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு நாளை (ஆக.27) முதல் 50% வரி - அமெரிக்கா நோட்டீஸ். நுகர்வுக்காக அல்லது பண்டக சாலைக்கு அனுப்பப்படும் இந்தியப் பொருட்கள் மீது வரி அமல். ரஷ்யாவால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் காரணமாகவே கூடுதல் வரி என நோட்டீஸில் அமெரிக்கா விளக்கம்

ரிலையன்ஸின் விலங்கியல் மையம் - SIT விசாரணை

குஜராத்தில் ரிலையன்ஸ் அறக்கட்டளை நடத்தும் 'வந்தாரா' விலங்கியல் மையம் குறித்து விசாரிக்க முன்னாள் நீதிபதி செல்லமேஷ்வர் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தது உச்ச நீதிமன்றம். வெளிநாடு மற்றும் உள்நாட்டில் இருந்து சட்ட விரோதமாக விலங்குகளை இம் மையத்திற்கு கொண்டு வந்துள்ளதாக தொடரப்பட்ட பொதுநல வழக்கில், வரும் செப். 12ம் தேதி இக்குழு விசாரணை அறிக்கையை அளிக்கவும் உத்தரவு

தங்கப்பதக்கம் வென்ற மீராபாய் சானு

காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில், இந்திய வீராங்கனை மீராபாய் சானு, தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார். 48 கிலோ எடைப் பிரிவில் பங்கேற்ற அவர் ஸ்நாட்ச், கிளீன் அண்ட் ஜெர்க் பிரிவுகளில் ஒட்டுமொத்தமாக 193 கிலோ பளுதுாக்கி தங்கப்பதக்கம் வென்றார்.

துலீப் கோப்பை கிரிக்கெட்

நடப்பாண்டிற்கான துலீப் கோப்பை போட்டிகள் வரும் 28ம் தேதி துவங்கி, செப். 15ம் தேதி நிறைவு பெறுகின்றன. இதில், வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, மத்திய மற்றும் வடகிழக்கு என ஆறு மண்டலங்களாக அணிகள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெறும். அனைத்து போட்டிகளும், பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) சென்டர் ஆப் எக்சலன்ஸ் விளையாட்டு அரங்குகளில் நடைபெற உள்ளன.