மேலும் அறிய
Top 10 News Headlines: தங்கம் விலை உயர்வு, சென்னை விரையும் அண்ணாமலை, ஏப்.16-ல் நாடாளுமன்றம், ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today Apr. 3rd: இந்தியா முழுவதிலும் காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக தற்போது பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABPLIVE AI
- தமிழக சட்டமன்ற தேர்தலில் இதுவரை 1360-க்கும் மேற்பட்டோர் வேட்பு மனு தாக்கல். புனித வெள்ளியை முன்னிட்டு இன்று அரசு விடுமுறை என்பதால் மனு தாக்கல் கிடையாது.
- திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் இன்று மாலை 5 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை.
- பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 19 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தேசிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் பாஜக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் இன்னும் வெளியாகவில்லை.
- சென்னையில் பிரதமர் மோடி நடத்தும் ஆலோசனைக் கூட்டத்தில் அண்ணாமலை கட்டாயம் பங்கேற்க அழைப்பு என தகவல். தேசிய தலைமையின் அறிவுறுத்தலை அடுத்து, அவர் கேரளாவில் இருந்து சென்னை விரைகிறார்.
- சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் உயர்ந்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை மாற்றமின்றி கிராம் ரூ.255-க்கு விற்பனை.
- புதுச்சேரியில் தேர்தல் பரப்புரை செய்ய தனி விமானம் மூலம் இன்று பிற்பகல் சென்னை வருகிறார் பிரதமர் மோடி - இன்று மாலை புதுச்சேரி அஜந்தா சிக்னல் முதல் அண்ணா சாலை வரை சுமார் 1.7 கி.மீ. வரை ரோடு ஷோ செய்து ஆதரவு திரட்டுகிறார்.
- மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்களை நிறைவேற்ற, ஏப்ரல் 16-ம் தேதி நாடாளுமன்றம் கூடுவதாக அமைச்சர் கிரஷ் ரிஜிஜு தகவல்.
- ஈரானின் மிக உயரமான பாலத்தை தகர்த்த வீடியோவை வெளியிட்ட நிலையில், உடனடியாக ஒப்பந்தம் மேற்கொள்ளாவிட்டால், தாக்குதல் தீவிரமடையும் என ட்ரம்ப் எச்சரிக்கை.
- ஈரானின் டெஹ்ரான் மற்றும் கராஜ் நகரங்களை இணைக்கும் பி1 பாலத்தின் மீது அமெரிக்கா ஏவுகணை தாக்குதலை நடத்தியது. அதற்கு பதிலடியாக, இஸ்ரேலின் டெல் அவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது ஈரான்.
- ஐபிஎல் தொடரில், இன்று இரவு சென்னையில் நடைபெறும் லீக் ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion





















