- நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை நாளை சென்னையில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். தமிழ்நாடு முழுவதும் 1,256 முகாம்களில், இதயம், அறுவை சிகிச்சை, பொது மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கிறார்கள்.
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை, முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் இன்று மீண்டும் சந்தித்துள்ளார். காலை நடை பயிற்சியின் போது, நேற்றும், இன்றும் சந்திப்பு.
- சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.180 குறைந்து, ஒரு சவரன் ரூ.73,200-க்கும், ஒரு கிராம் ரூ.9,150-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
- சென்னையில் வணிகப் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ.34.50 குறைந்து ரூ.1,789-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- ஆணவக் கொலை செய்யப்பட்ட கவினின் உடலை வாங்க 5 நாட்களுக்குப் பின் அவரது உறவினர்கள் சம்மதம். சுர்ஜித்தின் தந்தை கைது செய்யப்பட்டதால் முடிவு.
- வட தமிழ்நாடு-தெற்கு ஆந்திர கடற்பகுதியில் முதல் வாரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
- எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு இடையே, பீகாரில் வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியாகிறது. 65 லட்சம் பேர் பட்டியலில் இடம்பெற மாட்டார்கள் என தகவல். செப்.1-ம் தேதி வரை விடுபட்ட வாக்காளர்களின் பெயரை சேர்க்கலாம்.
- குஜராத் காந்திநகரில், பெண் மருத்துவரை 103 நாட்கள் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து, ரூ.19 கோடியை சைபர் மோசடி கும்பல் பறித்துள்ள சம்பவத்தால் அதிர்ச்சி.
- இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் 25% இறக்குமதி வரி விதிப்பு இன்று முதல் அமலாகிறது.
- சிரியா மீது இதுவரை இல்லாத அளவாக 41% வரி விதித்துள்ள அமெரிக்கா, லாவோஸ், மியான்மர் மீது 40% வரியை விதித்துள்ளது.
- மியான்மரில் 4 ஆண்டுகளாக அமலில் இருந்த அவசர நிலை நீக்கப்பட்டுள்ளதாக ராணுவம் அறிவிப்பு. பொதுத் தேர்தல் நடத்துவதற்கு இது அவசியமான நடவடிக்கை என விளக்கம்.
- ஓவல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இங்கிலாந்தின் அபார பந்துவீச்சால், இந்திய அணி 206 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறல்.