மேலும் அறிய
Top 10 News Headlines: கூட்டணி ஆட்சி-இபிஎஸ் பதில், வந்தே பாரத் முன்பதிவில் புதிய வசதி, ட்ரம்ப்பிற்கு வந்த நோய் - 11 மணி செய்திகள்
Top 10 News Headlines Today July 18: இந்தியா முழுவதிலும் இன்று காலை முதல் 11 மணி வரை நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக பார்க்கலாம்.

11 மணி தலைப்புச் செய்திகள்
Source : ABP
- வடகிழக்கு பருவமழை தொடங்கும்முன் மழைநீர் வடிகால் மற்றும் சாலைப் பணிகளை முடிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணை. மாநகராட்சிகள், நகராட்சிகளில் 8,200 புதிய பணிகளை விரைவில் தொடங்கவும் உத்தரவு.
- கூட்டணி ஆட்சி குறித்து நேற்று அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு பதிலளித்துள்ள எடப்பாடி பழனிசாமி, வரும் சட்டமன்ற தேர்தலில் வென்றால் அதிமுக தனித்தே ஆட்சி அமைக்கும் என மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
- சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், தேனி, தென்காசி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல்.
- கேரளாவில், கள்ளில் அனுமதிக்கப்பட்ட ஆல்கஹால் அளவை 8.1%-த்திலிருந்து 8.98%-ஆக மாற்றியுள்ளது அரசு. 16 ஆண்டுகால சட்டப்போராட்டத்திற்குப் பின் இந்த உச்ச வரம்பு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
- பீகார் மற்றும் மேற்கு வங்கத்தில் இன்று ரூ.12,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி.
- அகமதாபாத் விமான விபத்திற்கு விமானி தான் காரணம் எனக் கூறி வெளியான பிரபல அமெரிக்க பத்திரிகையின் அறிக்கையை, அவ்விபத்தின் விசாரணையை மேற்கொண்டுள்ள ஏஏஐபி மறுத்துள்ளது.
- ரயில் பயணிகளின் வசதிக்காக, குறிப்பிட்ட சில வந்தே பாரத் ரயில்களில், கடைசி 15 நிமிடங்களுக்கு முன்பாக முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
- குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளான பிருத்வி-2 மற்றும் அக்னி-1 ஆகியவற்றை வெற்றிகரமாக சோதித்தது இந்தியா. ஒடிசாவின் சந்திப்பூர் பகுதியில் ஏவப்பட்ட சிறிது நேரத்தில் குறிப்பிட்ட இலக்கை 2 ஏவுகணைகளும் துல்லியமாக தாக்கியதாக பாதுகாப்பு அமைச்சகம் தகவல்.
- அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பிற்கு 'Chronic Venous Insufficiency' என்ற நோய் கண்டறியப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நோய், கால்களில் இருந்த இதயத்திற்கு ரத்தம் சரியாக திரும்பாததால் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இங்கிலாந்தில், வாக்களிக்கும் வயதை 16-ஆக குறைக்கு மசோதாவை விரைவில் சட்டமாக்க அந்நாட்டு அரசு திட்டம். வாக்களிக்க உரிமை இருந்தாலும், தேர்தலில் போட்டியிட, லாட்டரி வாங்க, மது அருந்த, திருமணம் செய்ய, போருக்கு செல்ல அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Before You Go
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





















