பேருந்து நிலையத்தை திறந்து வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்
செங்கல்பட்டு மாவட்டம் முடிச்சூரில் ரூ.42.70 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்துமிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த நிறுத்துமிடத்தில், ஓட்டுநர்களுக்கான ஓய்வறை, குளியலறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அனைத்தும் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன.
இன்று உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி
வங்கக் கடலில் இன்று உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி. இதன் காரணமாக வரும் 11 மற்றும் 12ம் தேதிகளில் காவிரி டெல்டா மாவட்டங்களில் கனமழை பொழியும் என மண்டல வானிலை மையம் எச்சரித்துள்ளது.
விஜய் பேச்சு - திருமாவளவன் பதிலடி
அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிலேயே பங்கேற்க முடியாத அளவிற்கு, திருமாவளவனுக்கு கூட்டணி கட்சியின் அழுத்தம் இருப்பதை . என்னால் யூகிக்க முடிகிறது என விஜய் பேச்சு. அழுத்தம் கொடுத்து, அதற்கு இணங்குமளவிற்கு நான் பலவீனமானவன் இல்லை என திருமாவளவன் பதிலடி
ரூ.75 லட்சம் ரொக்கம் பறிமுதல்
திருச்சி வந்த ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுவரப்பட்ட ₹75 லட்சம் பணத்தை ரயில்வே பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்தனர்! சிவகங்கையை சேர்ந்த ஆரோக்கியதாஸ் என்பவர் கொண்டு வந்த பையில் இப்பணம் சிக்கியுள்ளது. இது குறித்து வருமானவரித்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணை தொடங்கியுள்ளது.
டாலருக்கு மாற்றா? - ஆர்பிஐ விளக்கம்
BRICS உறுப்பு நாடுகளுக்கு 100% வரி விதிப்பு என ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கையை அடுத்து, டாலருக்கு மாற்றாக எந்த நாணயத்தையும் சர்வதேச வர்த்தகத்துக்கு பயன்படுத்தும் திட்டம் இல்லை என RBI ஆளுநர் சக்திகாந்ததாஸ் திட்டவட்டம்! டாலர் பயன்பாட்டை குறைக்க, BRICS நாணயத்தை உருவாக்கும் முனைப்பில், உறுப்பு நாடுகளில் ஒன்று இத்திட்டத்தினை முன்வைத்தது. ஆனால் இது அடுத்தகட்டத்துக்கு செல்லவில்லை என அவர் விளக்கம்!
அஜித் பவாரின் சொத்துகள் விடுவிப்பு
பினாமி சட்டத்தின்கீழ் பறிமுதல் செய்யப்பட்ட மராட்டிய துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு தொடர்புடைய ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துகளை விடுவித்தது வருமான வரித்துறை. 2021ல் சிவசேனா-காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் அஜித் பவார் இருந்தபோது ரெய்டுகள் நடத்தி சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. பாஜக கூட்டணி ஆட்சியிஇணைந்த பிறகு |அவர் மீதான பினாமி வழக்கு ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது சொத்துகள் விடுப்பு.
கார் விபத்தில் 5 பேர் உயிரிழப்பு
தெலங்கானா போச்சம்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் அதிவேகமாக சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து ஏரியில் கவிழ்ந்து விபத்து - காரில் பயணித்த 5 பேர் உயிரிழப்பு. நீச்சல் தெரிந்ததால் ஒருவர் மட்டும் உயிர்தப்பினார்.
இந்தியர்களுக்கு எச்சரிக்கை
உள்நாட்டு போர் சூழல் காரணமாக இந்தியர்கள் யாரும் சிரியா செல்ல வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. அங்குள்ள இந்தியர்கள் உடனடியாக தாயகம் திரும்பவும் அறிவுறுத்தியுள்ளது.
ட்ரம்புக்காக ரூ.2,120 கோடி செலவழித்த எலான் மஸ்க்
அமெரிக்க அதிபர் தேர்தலில், டோனல்ட் ட்ரம்ப்புக்காக தொழிலதிபர் எலன் மஸ்க், ₹2,120 கோடி செலவு செய்ததாக அதிபர் தேர்தல் பிரசார செலவு தொடர்பாக வெளியிட்டுள்ள செலவின விவரங்களில் தகவல். குடியரசுக் கட்சியின் செனட் வேட்பாளர்களுக்கு ஆதரவு தெரிவித்த |குழுக்களுக்கும், தேர்தல் பிரசார செயற்பாட்டு நிறுவனங்களுக்கும் பல கோடியை எலன் மஸ்க், அள்ளிக் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆஸ்திரேலியா நிதான ஆட்டம்
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா அணி நிதானமாக விளையாடி வருகிறது. 132 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து, 48 ரன்கள் பின்தங்கியுள்ளது. இந்தியா முதல் இன்னிங்ஸில் 180 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது குறிப்பிடத்தக்கது.