ஆந்திராவில் பெண்களுக்கு WORK FROM HOME திட்டம்..
பெண்களின் வேலைவாய்ப்புகளை அதிகப்படுத்தவும் வேலை - வாழ்க்கை சமநிலையை மேம்படுத்தவும் WORK FROM HOME திட்டத்தை ஆந்திர பிரதேசத்தின் புதிய ஐடி கொள்கையில் செயல்படுத்த உள்ளதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவிப்பு. பெண்கள் தங்கள் சொந்த ஊர்களில் இருந்தே பணி செய்யும் வகையில், ஒவ்வொரு மாநகரம், நகரம், மண்டலத்தில் COWORKING SPACE எனப்படும் பகிர்ந்து பயன்படுத்தும் வகையில் ஐடி அலுவலகங்கள் அமைக்கவும், கிராமப்புரங்களில் வேலைவாய்ப்புகள் உருவாக்கவும் ஐடி நிறுவனங்களுக்கு ஊக்குவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
அல்வாவினால் வந்த வினை:
உத்தரப்பிரதேசத்தின் மொராதாபாத் மாவட்டம் பரிதாபூரில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில் பரிமாறப்பட்ட கேரட் அல்வா சாப்பிட்ட 150 பேருக்கு வாந்தி, மயக்கம். மருத்துவமனையில் அனுமதி. மொத்தம் 400 பேருக்கு மேல் கலந்துகொண்ட இந்த விழாவில் அடுத்தடுத்து பலருக்கும் வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. கேரட் அல்வாவில் சேர்க்கப்பட்ட பால் பொருள் கெட்டுப்போய் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாகத் தகவல்.
முதல்வர் மருந்தகம் - பிப். 24இல் துவக்கி வைப்பு
தமிழகம் முழுவதும் 1,000 முதல்வர் மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிப்.24இல் தொடங்கி வைக்கிறார் சென்னையில் கொளத்தூர், தி.நகர் உள்பட 33 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன.
இங்கிலாந்தில் சட்டவிரோத குடியேற்றம்-600 பேர் கைது
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் உட்பட 600 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியர்களின் உணவகங்கள், மதுக்கூடங்கள், தேநீர் கடைகளில் குடியேற்ற அதிகாரிகள் சோதனை அமெரிக்காவை அடுத்து இங்கிலாந்திலும் சட்ட விரோத குடியேற்றத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
16 பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு
ஐரோப்பாவில் சட்ட விரோதமாக குடியேறுவதற்காகப் பாகிஸ்தானைச் சேர்ந்த 63 பேர் படகில் சென்றபோது, லிபியா| கடற்பகுதியில் படகு கவிழ்ந்த விபத்தில் 16 பேர் உயிரிழப்பு.37 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 10 பேரை காணவில்லை என தகவல்.
மாசி மாத பூஜை - சபரிமலை கோயில் நடை திறப்பு
தமிழின் மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது இன்று முதல் பிப்ரவரி 17ஆம் தேதி வரை 5 நாட்கள் சபரிமலை கோயில் நடை திறந்திருக்கும் இன்று மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறந்து நெய் அபிஷேகம், பூஜைகள் நடக்கும்.
அதிமுக விவகாரம்-தேர்தல் ஆணையம் விசாரிக்க தடையில்லை"
அதிமுக உள்கட்சி விவகாரம் குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்கத் தடையில்லை; தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீட்டு சட்டப்படி விசாரணை நடத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. அதிமுக உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த விதிக்கப்பட்ட தடை நீக்கம்; தேர்தல் ஆணையம் தலையிட அதிகாரம் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிப்பு.
சாம்பியன்ஸ் கோப்பை - பும்ரா விலகல்
சாம்பியன்ஷிப் டிராபியில் இருந்து காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் பும்ரா விலகியுள்ளார். பும்ராவுக்கு பதிலாக ஹர்சித் ரானா இந்தியா அணியில் இடம் பிடித்துள்ளார்; இங்கிலாந்து அணிக்கு எதிரானடி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரிலும் பும்ரா விளையாடவில்லை; ஐசிசி சாம்பியன்ஸ் (கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட அணியில் இருந்து பும்ரா விலகல்.
3வது ஒருநாள் போட்டி:
இந்தியா - இங்கிலாந்து 3ஆவது ஒருநாள் போட்டி இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3ஆவது ஒருநாள் போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெறுகிறது மொத்தம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா வென்றுள்ளது.
10 ஆண்டுகள் கழித்து ரீரிலீஸ் - சாதனை படைத்த Interstellar
கிறிஸ்டோபர் நோலன் இயக்கி, 2014-ல் வெளியான 'இன்டர்ஸ்டெல்லர்' இந்தியாவில் ரீரிலீசான முதல் வாரத்தில் அதிக 'Opening' பெற்ற ஹாலிவுட் படம் என்ற சாதனையை படைத்துள்ளது!விண்வெளி பயணங்கள், காலப் பயணம், குவாண்டம் இயற்பியல், வார்ம்ஹோல் என அறிவியல் கூறுகளுடன் மனித உணர்வுகளின் ஆழத்தை பிரதிபலிக்கும் விதமாக அமைந்திருக்கும் கதைக்களம், தத்ரூபமான காட்சியமைப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.