சென்னை விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுக்கு கோவிட் தொற்று பரிசோதனை செய்யும் முறைகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். 


குமரி கடல் பகுதியில் நீடிக்கிறது வளிமண்டல மேலடுக்கு சுழற்சி - தமிழக வட கடலோர மாவட்டங்களில் இன்றும் மிகக் கனமழைக்கு வாய்ப்பு


கொமரின், தெற்கு கடலோர தமிழகம் மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்திலும், மணிக்கு 60 கி.மீ வேகத்திலும் காற்று வீசும். மேற்குறிப்பிட்ட காலத்திற்கு மீனவர்கள் இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள்.


சென்னை, பட்டாளம் பகுதியில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர்  மு.க ஸ்டாலின் பார்வையிட்டார்.  


காட்டு யானைகள் உயிரிழந்த விவகாரம்: ரயில் ஒட்டுநர் உள்ளிட்ட 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது


நீட் மசோதா தொடர்பாக சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் முதலமைச்சர் மு. க. ஸ்டாலின், ஆளுநர் ஆர். என். ரவியை நேற்று நேரில் சந்தித்தார்.


இன்று மாநிலம் முழுவதும் 12வது முறையாக தீவிர தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.  


முழுநேர முனைவர் பட்ட படிப்பை மேற்கொள்ளும் ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான ஊக்க தொகை 50,000 ரூபாயிலிருந்து 1 லட்சம் ரூபாயாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. 


அண்மைக் காலமாக ஓ.பி.எஸ். போன்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தங்கள் மீது உள்ள அடுக்கடுக்கான ஊழல் புகார்கள் வெளிவர தொடங்கியுள்ள காரணத்தால், அதனை திசைத்திருப்பும் நோக்கோடு,  தி.மு.க.மீது குற்றஞ்சாட்டி வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை வெளியிட்டுள்ளார். 


இந்தியா: 


கடந்த 24 மணி நேரத்தில் 8,318 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.


புதிய வகைத் தொற்றை எதிர்கொள்ள ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்து நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் பேசினார் .


 






 


கடந்த 24 மணி நேரத்தில் 10,967 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 3,39,88,797 என அதிகரித்துள்ளது. 


உலகம்: 


'ஒமைக்ரான்‘  எனப்படும் புதிய வகை உருமாறிய தொற்று உலக நாடுகள் முழுவதும் பரவி வருகிறது. 


விளையாட்டு:  


இந்தோனேஷிய ஓபன் பேட்மிண்டன் போட்டி மகளிர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி வி சிந்து அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனையிடம் தோல்வி அடைந்தார்.


கான்பூரில் நடைபெற்று வரும் நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாளான இன்று இந்தியா தனது இரண்டாவது இன்னிங்சில் ஆட்ட நேர இறுதியில் 1 விக்கெட் இழப்புக்கு 14 ரன் எடுத்துள்ளது.