மேலும் அறிய
Advertisement
Todays News Headlines: கன்னியாகுமரியில் பள்ளிகளுக்கு விடுமுறை... 3 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. இன்னும் பல!
Todays News Headlines: கடந்த 24 மணி நேரத்தில் நடந்த முக்கிய செய்திகளை தலைப்பு செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- கொரோனா தொற்றால் பெற்றோரை இழந்த தனியார் பள்ளி மாணவர்கள் கட்டணத்தை அரசே ஏற்கும் : தமிழக அரசு தகவல்
- தேர்தல் ஆணையத்தின் அனைத்துக்கட்சி கூட்டத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் அணியினர் மோதல் : முதல் இருக்கையை ஓபிஎஸ் பிடித்ததால் பரபரப்பு
- நகராட்சி அலுவலங்களுக்கு புதிதாக 187 வாகனங்களை முதலமைச்சர் முக ஸ்டாலின் வழங்கினார்.
- கன்னியாகுமரி , நெல்லை மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில், அடுத்த 3 நாட்களுக்கு அதி கன மழை பெய்ய வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
- தமிழக நிதி அமைச்சரை கண்டித்து ஆகஸ்ட் 20-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஐந்து மண்டலங்களில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிப்பு
- கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை: விண்ணப்பங்களைத் திருத்த 2 நாட்கள் அவகாசம்.
- திருப்பூர் நகர புதிய காவல் ஆணையராக எஸ்.பிரபாகர் ஐபிஎஸ் நியமனம்
- அனைத்து பள்ளிகளிலும் EMIS செயலி மூலம் வருகைப் பதிவேடு: நேற்று முதல் அமலுக்கு வந்தது
- கனமழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை : மாவட்ட ஆட்சியர்
இந்தியா :
- ஆந்திர முன்னாள் முதல்வர் என்.டி.ஆர் மகள் உமாமகேஸ்வரி திடீர் மரணம் : காவல் துறையினர் தீவிர விசாரணை
- நாடு முழுவதும் தபால் நிலையங்களில் தேசியக் கொடியை விற்பனை செய்ய தபால் துறை திட்டமிட்டுள்ளது.
- மத்திய பிரதேசத்தில், தனியார் மருத்துவமனையில் தீ விபத்து; 10 க்கு மேற்பட்டோர் உயிரிழப்பு என தகவல்.
- ஜூலை மாதத்தில் மொத்தம் ரூ. 1,48,995 கோடி ஜிஎஸ்டி தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- டெல்லியில் மது தட்டுப்பாடு : தனியார் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளதால் அங்கு மது தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு
உலகம் :
- கோத்தபய நாடு திரும்ப இது சரியான நேரமல்ல : இலங்கை அதிபர் ரணில் பேச்சு
- இலங்கையின் முக்கிய வர்த்தகத்துறையினர் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக குற்றச்சாட்டு
- சீன நிறுவனம் நிறுவப்பட்டு 95 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக ஜாங்கோ நகரி ட்ரோன்கள் மூலம் வானில் வண்ணமயமான கண்காட்சி
விளையாட்டு :
- காமன்வெல்த் மகளிருக்கான 48 கிலோ ஜூடோ பிரிவில் இந்திய வீராங்கனை சுஷிலா தேவி வெள்ளிப்பதக்கம்.
- காமன்வெல்த் ஆடவருக்கான 60 கிலோ ஜூடோ பிரிவில் இந்திய வீரர் விஜய் குமார் வெண்கலப் பதக்கம்.
- இந்தியாவிற்கு எதிரான 2வது டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
சேலம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion