தமிழ்நாடு:



  • அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ் தரப்பு மேல் முறையீடு செய்துள்ளது.

  • அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக ஓபிஎஸ் தரப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல்.

  • சென்னை பசுமைவழி சாலையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் முதலமைச்சர் மருத்துவ பரிசோதனை.

  • தமிழ் சொற்பொழிவாளர் மற்றும் அரசியல் கட்சி தலைவரான நெல்லை கண்ணன் உடல் நல குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார்.

  • தமிழ்நாட்டில் ஒரே நாளில் 643 பேருக்கு கொரோனா தொற்று உறுதி.

  • அரும்பாக்கம் வங்கி கொள்ளையில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளி முருகன் சிறையில் அடைப்பு.

  • திண்டிவனம் ஓங்கூற் பாலத்தில் மீண்டும் போக்குவரத்து தொடங்கியுள்ளது. 

  • திருவாரூர் அருகே மின்சாரம் தாக்கி 4 சிறுவர்கள் காயம்.

  • மதுரை கப்பலூர் சுங்கச் சாவடியில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகராறு.

  • தமிழ்நாட்டில் டெல்டா உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.


இந்தியா:



  • நடுவானில் எரிபொருள் நிரப்பி இந்தியாவின் சுகோவ் விமான காட்சிகள் வைரலாகி வருகின்றன.

  • புதுச்சேரியின் ஏனாமிலுள்ள கோதாவரி ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

  • முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி நேரில் சந்தித்தார்.

  • நாடு முழுவதும் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. 

  • மின்சார வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் என அமைச்சர் நிதின் கட்கரி தகவல்.

  • பாகிஸ்தானில் வந்த இந்து அகதிகளுக்கு ஏன் வீடு ஒதுக்கப்படவில்லை என்று டெல்லி முதலமைச்சர் கேஜ்ரிவால் மீது பாஜக குற்றச்சாட்டு.

  • ஒடிசாவின் கட்டாக் மாவட்டத்தில் பலத்த மழை காரணமாக வெள்ளம் சூழந்துள்ளது.


உலகம்:



  • இந்தியா-சீனா இடையேயான உறவு கடினமான கட்டத்தை தாண்டி வருவதாக மத்திய வெளியறவு

  • ரஷ்ய துணை பிரதமருடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு.

  • இங்கிலாந்து முழுவதும் ஆயிர கணக்கான ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து வருகின்றனர்.

  • பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் பெய்த கனமழை காரணமாக மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

  • ரஷ்ய படைகள் வெளியேறும் வரை அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை இல்லை என்று உக்ரைன் அதிபர் ஸலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

  • அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற இலங்கை முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச விண்ணப்பித்துள்ளார்.

  • சர்வதேச நிதியத்தின் குழு இம்மாதம் இறுதியில் இலங்கை வர உள்ளது.  அந்தக் குழுவுடன் கடன் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தப்படும்.


விளையாட்டு:



  • ஜிம்பாவே அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தல். 

  • கத்தாரில் நடைபெற உள்ள ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான 25 லட்சம் டிக்கெட்டுகள் விற்றுள்ளன.