Todays News Headlines: முதலமைச்சர் கடிதம்... புனித வெள்ளி... குஜராத் வெற்றி: இன்னும் பல முக்கிய செய்திகள்

நீட் விலக்கு மசோதா தொடர்பாக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Continues below advertisement

தமிழ்நாடு:

Continues below advertisement

  • தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு நீட் விலக்கு மசோதா தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார்.
  • வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக அடுத்த முடிவு தொடர்பாக அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை.
  • தமிழகம் முழுவதும் ஹெல்த் மேளா என்ற சுகாதார முகாம் நடத்த திட்டம்.
  • மீன்பிடி தடைக்காலம் இன்று முதல் தமிழ்நாட்டில் அமலுக்கு வந்தது. 
  • தமிழ்நாட்டில் 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல். 
  • தர்மபுரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. 

இந்தியா:

  • கர்நாடகா அமைச்சர் ஈஸ்வரப்பா இன்று தனது ராஜினாமா கடிதத்தை அளிக்க உள்ளார். 
  • டீசல் ரயில்களில் கூடுதல் கட்டணம் என்று பரவும் செய்தி ஆதாரமற்றது.
  • டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 
  • டெல்லியில் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து பெண் ஒருவர் தற்கொலை முயற்சி.
  • நடப்பு ஆண்டில் இந்தியாவில் சராசரியாக  தென்மேற்கு பருவ மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.

உலகம்:

  • உலகம் முழுவதும் இன்று புனித வெள்ளி தினம் அனுசரிக்கப்படுகிறது. 
  • இலங்கையில் தொடர்ந்து மக்கள் போராட்டம்
  • மாகவீரர் ஜெயந்தி மற்றும் பைசகி தினத்தை முன்னிட்டு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • ஐநா பொதுச்செயலாருடன் உக்ரைன் பிரச்னை தொடர்பாக அமெரிக்க அதிபர் ஆலோசனை.
  • நைஜீரியாவில் படகு கவிழ்ந்து 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
  • சீனாவின் ஷாங்காய் பகுதியில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பரவல்.
  • ரஷ்ய போர் கப்பலை தகர்த்தியதாக உக்ரைன் கூறியதில் உண்மையில்லை என்று ரஷ்யா அறிவிப்பு.

விளையாட்டு:

  • ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி ராஜஸ்தான் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
  • ஐபிஎல் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

Continues below advertisement