தமிழ்நாடு:
* திருமணம் போன்ற விழாக்களுக்கு செல்பவர்களுக்கு காவல்துறை அனுமதி வழங்கி முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது.
* நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற சட்டரீதியாக போராட்டம் நடத்தப்படும் - முதல்வர் தலைமையில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்
* உலகம் முழுக்க கொரோனா தொற்று எண்ணிக்கை எவரெஸ்ட் போல் அதிகரிக்கிறது - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
* 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் தான் சென்னை புறநகர் ரயிலில் பயணம் செய்ய முடியும் - தெற்கு ரயில்வே
* நீட் தேர்வு விலக்கு தீர்மானத்தில் உடன்பாடு இல்லை - அனைத்து கட்சி கூட்டத்தில் பாஜக வெளிநடப்பு
இந்தியா:
* உத்தர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான அட்டவணையை இந்திய தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.
* பெங்களூருவில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தில் சாப்ட்வேர் என்ஜினீயர்கள் 4 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
* ஒரு வாரத்திற்குள் 2 கோடி சிறார்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மனுசுக் மாண்டவியா தகவல்
உலகம்:
* கிரீஸ் நாட்டின் பாரம்பரிய சின்னங்களில் செக்ஸ் காட்சிகள் எடுத்தற்காக அந்த அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
* விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் 80-வது பிறந்தநாளை முன்னிட்டு கூகுள் டூடூல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது.
* சீனாவில் அரசு அலுவலகத்தில் கியாஸ் கசிந்து ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டிடம் முழுமையாக இடிந்து விழுந்ததில் 16 பேர் உயிரிழந்தனர்.
விளையாட்டு:
* சிட்னியில் நடைபெற்று வரும் ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்சையும், ஜானி பார்ஸ்டோவையும் ரசிகர் ஒருவர் தகாத வார்த்தைகளால் கேலி செய்தது சர்ச்சையாகியுள்ளது.
* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சாளர் ஹரீஸ் ராஃப்க்கு தோனி தனது சென்னை அணியின் ஜெர்ஸியை பரிசாக கொடுத்துள்ளார்.
* மயிலாடுதுறையில் கொரோனா தடுப்பூசி விழிப்புணர்வு மாரத்தான் - 400க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்