தமிழ்நாடு:


* தமிழ்நாட்டில் ஒமிக்ரானில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 7இல் இருந்து 12ஆக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திட்டமிட்டபடி தேமுதிக தனித்து போட்டியிடுவது உறுதி என பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.


* தமிழகத்தில் உள்ள கோயில்களில் பிரசாதம் தயாரிக்க மற்றும் பிற சேவைகளுக்கு வருகின்ற ஜனவரி 1 ஆம் தேதி முதல் ஆவின் நெய் மற்றும் வெண்ணெய்யை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என  இந்து சமய அறநிலையத்துறை உத்தரவு


* இந்தியாவின் முன்னணி தோட்டக்கலை நிபுணரும், ரோஜா வளர்ப்பாளருமான கொடைக்கானலைச் சேர்ந்த எம்.எஸ்.வீரராகவன் புதிய வகை ரோஜாப்பூவுக்கு இந்தியாவின் பசுமைப்புரட்சியின் தந்தையான வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனை கவுரவிக்கும் வகையில் அவரது பெயரை சூட்டியுள்ளார்.


*  தலைமறைவாக உள்ள முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் ஆறு வங்கிக்கணக்குகளை முடக்கி தமிழ்நாடு காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


* கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் வடிவேலுக்கு எஸ் ஜீன் டிராப் உறுதியானதாகவும், தற்போது அவர் நலமுடன் இருப்பதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்.


* கீழ வெண்மணியில் ஒரே குடிசையில் வைத்து எரித்து படுகொலை செய்யப்பட்ட வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தில் அஞ்சலி செலுத்த சீமானுக்கு அனுமதி மறுப்பு.


இந்தியா:


* ராஜஸ்தானில் புதிதாக 21 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்பு உறுதியானதால் மொத்த பாதிப்பு 43 ஆக அதிகரித்துள்ளது.


* அசாமில் பசுவை கடத்தினால் சொத்து பறிமுதல் செய்யப்படும்.  புதிய சட்டம் அமலானது.


* கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக பெங்களூரைச் சேர்ந்த நபர் ஒருவர் 8 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உலகம்:


* ரஷ்யாவில் மாஸ்கோ நீதிமன்றம் ஒன்று கூகுள் நிறுவனத்தின் மீது சுமார் 100 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், பேஸ்புக் நிறுவனத்தின் மீது சுமார் 27 மில்லியன் அமெரிக்க டாலர்களையும் அபராதமாக விதித்துள்ளது.


* கிறிஸ்துமஸ் வார இறுதியில் உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் கிட்டத்தட்ட 4,300 க்கும் மேற்பட்ட விமானங்களை ரத்து செய்துள்ளதாக அதிர்ச்சிகர தகவல் கிடைத்துள்ளது.


* விவாகரத்து வழக்கில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த நபர் இஸ்ரேலை விட்டு இன்னும் 8 ஆயிரம் ஆண்டுகளுக்கு வெளியேறத் தடை விதித்து அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்த சம்பவம் பூதாகரமாகியுள்ளது.


விளையாட்டு:


* கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வை அறிவித்த ஹர்பஜன் சிங் அரசியலில் பிரவேசம் செய்யப்போகிறார் என்ற தகவல் கசிந்த நிலையில், அதற்கு அவர் மறுப்பு தெரிவித்தார்.


* நாளை தொடங்கும் தென்னாப்பிரிக்கா - இந்தியா பாக்சிங் டே டெஸ்ட் -  பாக்சிங் டே டெஸ்ட் குறித்து வரலாறு. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண