தமிழ்நாடு :



  • கேஸ் சிலிண்டர் குடோனில் பயங்கர தீ விபத்து - 12-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • நீதிமன்றம் சென்று பொதுமக்கள் அலைவதை தடுக்கும் வகையில் பதிவுத்துறைக்கு போலி ஆவணத்தை ரத்து செய்யும் அதிகாரம் : முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

  • அறநிலைத்துறை சார்பில் முதல்முறையாக திருச்செந்தூர் முருகன் கோயிலை ரூ.300 கோடியில் மேம்படுத்தும் பணி தொடக்கம்

  • காய்ச்சல் காரணமாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மருத்துவமனையில் அனுமதி

  • மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

  • தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்வு செய்ய அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு - பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

  • தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முன் பதிவு செய்துவிட்டு 73.99 லட்சம் பேர் அரசு வேலைக்காகக் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்

  • புதுச்சேரி அருகே ஆற்று மணல் கடத்தல்: திமுக ஒன்றியக் குழு உறுப்பினர் கைது

  • தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்ட PFI அமைப்பைச் சேர்ந்த 8 பேருக்கு NIA காவல்


இந்தியா:



  • மத்திய அரசு ஊழியர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி உயர்வு : 1.16 கோடி பேர் பயனடைவார்கள்

  • பல்வேறு புகார்களை தொடர்ந்து பாப்புலர் பிரண்ட் அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை : மத்திய அரசு அதிரடி

  • இந்தியாவின் முப்படைகளின் புதிய தலைமை தளபதியாக அனில் சவுகான் நியமனம்

  • மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக மூத்த வழக்கறிஞர் வெங்கடரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.

  • ராஜஸ்தான் மாநில முதல்வர் பதவியை் அசோக் கெலாட் ராஜினாமா செய்ய மாட்டார் என்று அந்த மாநில அமைச்சர்கள் திட்டவட்டமாக கூறியுள்ளனர்.

  • இலவச ரேஷன் திட்டத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உலகம்:



  • நேபாளம் சிகரத்தில் மாயமாகிய அமெரிக்க மலையேற்ற வீராங்கனை ஹிலாரி நெல்சன் இரண்டு நாட்களுக்கு பிறகு சடலமாக மீட்பு

  • ஈரான் குர்கிஸ்தான் பகுதியில் புரட்சிப் படையினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் 13 பேர் பலி

  • தென்னாப்பிரிக்காவின் டர்பனில் சிமானிலே என்ற பெண் ஒரு நிமிடத்தில் 120 கோழிக்கால்களை சாப்பிடு கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளார். 


விளையாட்டு:



  • தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியை இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

  • டி20 போட்டிகளுக்கான சிறந்த பேட்ஸ்மேன்களுக்கான புதிய தரவரிசை பட்டியலில் சூர்யகுமார் யாதவ் 2ம் இடத்திற்கு முன்னேறினார்.

  • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் தீபக் ஹூடா 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.