தமிழ்நாடு : 



  • முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் சசிகலா, விஜயபாஸ்கர் குற்றம் செய்தவர்கள் - பேரவையில் தாக்கலான ஆறுமுகசாமி அறிக்கையில் பரபரப்பு தகவல்

  • துப்பாக்கிச்சூடு சம்பத்தில் விதிமீறல் : கலெக்டர், ஐஜி உட்பட 17 பேர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான மருத்துவ கலந்தாய்வு இன்று தொடக்கம்: பொது பிரிவினருக்கு ஆன்லைனில் நடக்கும்

  • தீபாவளி பண்டிக்கையை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை : சென்னையில் 3 நாட்களில் சிறப்பு பேருந்துகள் 6 பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்து கழகம் தகவல்

  • தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தி திணிப்புக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம் : தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு

  • சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கை மதுரை நீதிமன்றமே விசாரிக்க வேண்டும் : உச்சநீதிமன்றம் உத்தரவு

  • சட்டமன்ற தலைவர் அரசியல் ரீதியாக செயல்படுவதாக நாங்கள் கருதுகிறோம் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

  • புதுச்சேரியிலும் தமிழ் வழியில் மருத்துவப் படிப்பு; பணிகள் தீவிரம் - ஆளுநர் தமிழிசை பேட்டி

  • ஆன்லைன் விளையாட்டுகளை தடை செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான சட்ட மசோதாவை முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்கிறார்


இந்தியா: 



  • குஜராத்தில் ஆட்சிக்கு வந்தால் 4 கி.மீ.க்கு ஓர் அதிநவீனப் பள்ளி; ஆம் ஆத்மி வாக்குறுதி

  • கேதார்நாத் அருகே ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழப்பு

  • குஜராத் மாநிலத்தில் லாரி மீது சொகுசு பேருந்து மோதிய விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்

  • பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் டெல்லி-என்சிஆரில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) நேற்று சோதனை நடத்தியது.


உலகம்: 



  • கால்பந்து போட்டியின்போது கலவரம் வெடித்த மைதானம் இடிக்கப்படும் - இந்தோனேசிய அதிபர் அறிவிப்பு

  • கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 65 லட்சத்து 72 ஆயிரத்து 490 பேர் உயிரிழந்துள்ளனர்.

  • இலங்கையைச் சேர்ந்த பிரபல புதின ஆசிரியர் ஷெஹான் கருணாதிலக இந்த ஆண்டிற்கான 2022 புக்கர் பரிசை வென்றிருக்கிறார்.

  • அமெரிக்காவில் மருந்து விற்பனை கடைகளில் மருத்துவர்களின் பரிந்துரை சீட்டு இல்லாமல் காது கேட்கும் கருவிகள் விற்பனை தொடங்கியுள்ளது. 


விளையாட்டு: 



  • அடுத்தாண்டு நடக்கும் ஆசிய கோப்பைத் தொடருக்காக பாகிஸ்தான் செல்ல மாட்டோம் - பி.சி.சி.ஐ. செயலாளர் ஜெய்ஷா அறிவிப்பு

  • டி20 உலககோப்பையில் ஹாட்ரிக் விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் தமிழன் என்ற சாதனையை ஐக்கிய அரபு அமீரக வீரர் கார்த்திக் மெய்யப்பன் படைத்துள்ளார்.

  • மகளிர்களுக்கான ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டித் தொடர் நடத்த பி.சி.சி.ஐ. ஒப்புதல் அளித்துள்ளது.

  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார்.