மேலும் அறிய
Advertisement
Headlines Today : ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு அனுமதி.. இன்று முதல் அறிமுகமாகும் 5ஜி.. இன்னும் பல முக்கியச் செய்திகள்..
Headlines Today : கடந்த 24 மணி நேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு :
- ஆர்.எஸ்.எஸ் பேரணியை நவம்பர் 6 ம் தேதி நடத்த அனுமதி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தைவான் நாட்டின் பெகாட்ரான் நிறுவனம் தமிழகத்தில் ஸ்மார்ட் போன் உற்பத்தி துறையில் ரூ.1000 கோடி முதலீடு : தொழிற்சாலையை திறந்து வைத்து முதலமைச்சர் முக ஸ்டாலின் பேச்சு
- ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
- தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னதுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல்
- டாஸ்மாக் பார் உரிமத்துக்கான டெண்டர் ரத்து : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
- தமிழ்நாட்டில் இனி கோயில்களில் நீண்ட வரிசையில் நிற்கவேண்டியதில்லை. ஆன்லைனில் பணம் செலுத்தி சாமி தரிசனம் செய்து கொள்ளலாம் என அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார்.
- பைக்கர் மற்றும் யூடியூபர் டி.டி.எஃப் வாசனை கோவை சூலூர் போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணைக்கு பிறகு காவல்நிலைய பிணையில் விடுவித்துள்ளனர்.
- அக்டோபர் இறுதியில் பொறியியல் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும் என அமைச்சர் பொன்முடி தகவல்
- காஞ்சிபுரம் சிலிண்டர் விபத்தில் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு
இந்தியா:
- பிரதமர் நரேந்திர மோடி இன்று, அக்டோபர் 1ம் தேதி, புதுதில்லியில் நடைபெறும் இந்திய மொபைல் காங்கிரஸின் ஆறாவது ஆண்டுக்கான நிகழ்வில் இந்தியாவில் 5ஜியை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்துகிறார்.
- ரெப்கோ வட்டி 4வது முறையாக உயர்வு; வீடு, வாகன கடன் தவணை அதிகரிக்கும் அபாயம் : பண வீக்கத்தை கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை
- காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கார்கே, சசிதரூர், திரிபாதி போட்டி - விலகினார் திக்விஜய் சிங்
- இந்திய ஒற்றுமை பாதயாத்திரையை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது - கர்நாடகாவில் ராகுல் காந்தி பேச்சு
உலகம்:
- ரஷியா ஆக்கிரமித்துள்ள உக்ரைன் பகுதிகளை இன்று நடைபெற உள்ள நிகழ்ச்சியில் ரஷியா அதிகாரப்பூர்வமாக இணைக்க உள்ளது.
- ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பில் 100 குழந்தைகள் பலியாகினர்.
- பிரிட்டன் உளவுத்துறை இணையதளம் முடக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இலங்கை சென்ற முன்னாள் மத்திய அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ராஜபக்சே சகோதரர்களை நேரில் சந்தித்து பேசினார்.
விளையாட்டு:
- இந்திய அணியில் இருந்து காயத்தால் விலகிய பும்ராவிற்கு பதிலாக முகமது சிராஜ் சேர்க்கப்பட்டுள்ளார்.
- தேசிய விளையாட்டு போட்டிகளில் மகளிருக்கான 49 கிலோ எடைப்பிரிவில் மீராபாய் சானு தங்கம் வென்று அசத்தினார்.
- தேசிய போட்டிகளில் துப்பாக்கிச் சுடுதலில் இளவேனில் வாலறிவன் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார்.
- தேசிய விளையாட்டு போட்டிகளில் வாள்வீச்சு பிரிவில் தமிழ்நாடு சார்பில் பவானி தேவி தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
- இந்தியா-இலங்கை மகளிர் அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை போட்டி இன்று நடைபெறுகிறது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion