தமிழ்நாடு :



  • எரிசக்தித்துறை சார்பில் ரூ.594.97 கோடியில் 14 புதிய துணை மின் நிலையங்கள் : முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

  • சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது.

  • தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மார்ச் மாதம் பிளஸ் 1, பிளஸ் 2 ஏப்ரலில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு : அமைச்சர் அன்பில்மகேஸ் அறிவிப்பு

  • தமிழ்நாட்டில் இன்று முழு சந்திர கிரகணம் : மாலை 5.11 மணிக்கு முடிகிறது

  • தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில்; சென்னை - மைசூர் இடையே சோதனை ஓட்டம் வெற்றி

  • தமிழ்நாடு ஆளுநர் விவகாரம் : அரசியலமைப்பை யார் மீறினாலும் தண்டனை என சபாநாயகர் அப்பாவு பேட்டி 

  • இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

  • பொருளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய வகுப்பினர்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பான வழக்கில் இன்று வெளியாகியுள்ள தீர்ப்பு சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு கால போராட்டத்தில் ஒரு பின்னடைவு - முதலமைச்சர் முக ஸ்டாலின் 

  • தமிழக அரசின் முன்னாள் கொறடா துரை. கோவிந்தராஜன் காலமானார்


இந்தியா: 



  • சினிமா பாடலை பயன்படுத்திய விவகாரம் ; காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு

  • பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கான 10% இடஒதுக்கீடு செல்லும் : உச்சநீதிமன்றம் தீர்ப்பு

  • ஆம் ஆத்மி மீதான புகார் பற்ரி சிபிஐ விசாரணை கோரி சுகேஷ் ஆளுநருக்கு கடிதம் : சிறையில் தனக்கு அசம்பாவிதம் நடக்கலாம் என குற்றச்சாட்டு 

  • பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் (போக்சோ) சட்டத்தின் கீழ் பாலியல் உறவுக்கு ஒப்புதல் அளிக்கும் வயதை மறுபரிசீலனை செய்யுமாறு இந்திய சட்ட ஆணையத்துக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

  • குழந்தையை பெற்றுக்கொள்ள வேண்டுமா வேண்டாமா என தேர்வு செய்யும் உரிமை பெண்களுக்கு உண்டு என கேரள உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

  • பொருளாதார அடிப்படையில் முன்னேறிய பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் போது அடித்தட்டு மக்களுக்கு ஏன் கொடுக்கவில்லை என திமுக வழக்கறிஞர் கேள்வி எழுப்பியுள்ளார்.


உலகம்:



  • நாஜிக்களை எதிர்த்து சண்டையிடுவது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட வரைவு தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. 

  • ட்விட்டர் நிறுவனம் தொடர்ந்து மெட்டாவிலும் பெரிய அளவிலும் பணீநீக்கம் இருக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

  • ஆண் ஆதிக்கம் மனிதகுலத்திற்கு கொடியது என்றும், பெண்ணின் பிறப்புறுப்பை சிதைப்பு என்பது நிறுத்தப்பட வேண்டிய குற்றம் என்றும் போப் தெரிவித்துள்ளார்.


விளையாட்டு:



  • பாலியல் குற்றச்சாட்டில் கைதான குணதிகலவுக்கு ஜாமீன் மறுப்பு : சஸ்பெண்ட் செய்தது இலங்கை கிரிக்கெட் வாரியம் 

  • 2024ம் ஆண்டு நடைபெறும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கு இதுவரை 12 அணிகள் நேரடியாக தகுதிபெற்றுள்ளனர்.

  • அக்டோபர் மாதத்துக்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தேர்வு செய்துள்ளது.

  • அரையிறுதியில் பாகிஸ்தான் அணியின் நலனுக்காக தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவதற்கு பதிலாக மூன்றாவது வீரராக நீங்கள் களமிறங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசாமுக்கு முன்னாள் கேப்டன் ஷாகித் அஃப்ரிடி அட்வைஸ் கொடுத்துள்ளார்.