Breaking Live: சென்னை போரூரில் மழை
தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.
LIVE

Background
எம்.ஜி.ஆர் மருத்துவபல்கலை.சட்டத்திருத்த மசோதாவை இன்று சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தாக்கல் செய்கிறார்
ஊர் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி : கட்டுப்பாடுகளை விதித்த உயர்நீதிமன்ற கிளை
கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தக்கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கொரோனா பரவல் காரணமாக இரவு 8 மணி முதல் 11 மணி வரை நடத்த மட்டுமே அனுமதி அளித்துள்ளது.
+ 2 பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேடு
இன்று நடைபெற்ற + 2 ஆங்கில பாட பொதுத்தேர்வில் 3 மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கல், புதுக்கோட்டை, காஞ்சிபுரத்தில் தலா ஒருவர் என 3 பேர் ஒழுங்கீன செயல்களில் ஈடுப்பட்டு பிடிப்பட்டனர் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பதவி விலகினார் மகிந்த ராஜபக்சே..!
இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகக்கோரி கடந்த சில வாரங்களாக அந்நாட்டில் போரட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்தநிலையில் இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார்.
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு
இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிவித்துள்ளது. கொழும்பு வடக்கு, மத்திய, தெற்கு, பகுதிகளில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்தநிலையில் தற்போது நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களுக்கு எச்சரிக்கை!
ஒழுக்ககேடாக நடந்து கொள்ளும் மாணவர்களின் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல் தெரிவித்துள்ளார்.
ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல்
கொழும்புவில் போராட்டக்காரர்கள் மீது மஹிந்த ராஜபக்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். 17 பேர் காயமடைந்த நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீசி போலீசார் கூட்டத்தை கலைக்கு முயற்சி.
நிர்மலா சீதாராமன்
தனியார் துறை வளர்ச்சியடைவதால் பொதுத்துறை அழியாது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் - அமைச்சர்..!
ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு விவகாரத்தில் தீக்குளித்த கண்ணையன் குடும்பத்துக்கு 10 லட்சம் நிதி வழங்கப்படும் - அமைச்சர்
பாஜக எம்.எல்.ஏக்களை தூக்கி விடுவோம் - ட்விட்டரில் எம்.பி செந்தில்குமார் பதிவு..!
திமுகவில் எந்த பதவியிலும் இல்லாத ஒருவர் உங்கள் கட்சியில் இணைவதை கொண்டாடும் தமிழக பாஜக உங்களுக்கு ஒரு தகவல். உங்க கட்சியின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் உள்ளார்கள்.எங்கள் தலைமை இசைவு தெரிவித்தால் இரண்டு பேரையும் தூக்கிவிடுவோம். - எம்.பி.செந்தில்குமார்
View this post on Instagram
ஆர்.கே.புரம் ஆக்கிரமிப்பு - நீதிமன்றத்தில் நாளை விசாரணை..!
சென்னை ஆர்.ஏ.புரம் ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் நாளை விசாரிக்கிறது.
குறைந்தது தங்கம் விலை.. இன்றைய விலை நிலவரம்..!
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 32 ரூபாய் குறைந்து 39,144 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி 10 காசுகள் குறைந்து 66.70 காசுகளுக்கு விற்கப்படுகிறது.
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் இறந்துள்ளனர்..!
இந்தியாவில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 29 பேர் இறந்துள்ளனர். 3,207 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.