Breaking Live : இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை : துக்ளக் குருமூர்த்தி பேச்சு

தமிழ்நாடு உள்பட பல்வேறு பகுதிகளிலும் நடைபெறும் முக்கிய நிகழ்வுகள், குற்றங்கள் பற்றி செய்திகளை கீழே உடனுக்குடன் காணலாம்.

ABP NADU Last Updated: 08 May 2022 07:51 PM
தேனியில் விழுந்த ஈ நிலைமை தான் இனி திமுக கட்சி : துக்ளக் குருமூர்த்தி பேச்சு

எந்த கட்சி ஒரு குடும்பத்தின் பிடியில் சிக்குகிறதோ, அது தேனியில் விழுந்த ஈ தான். அது வெளியிலும் வரமுடியாது, வந்தாலும் பறக்காது. உள்ளேயே அழிந்துவிடும். திமுகவிற்கு அதுதான் நடக்கப்போகிறது என துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். 

இந்தி திணிப்பை எதிர்ப்போம் என அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை : துக்ளக் குருமூர்த்தி பேச்சு

இந்தி திணிப்பை எதிர்ப்போம் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியது எனக்கு பிடிக்கவில்லை. பாஜக இந்த தவறை செய்யக் கூடாது என துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேசியுள்ளார். 

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்- தடை நீக்கம் !

தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசத்திற்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்கி மயிலாடுதுறை கோட்டாட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பட்டண பிரவேசம் நிகழ்வு நடத்த அனுமதி - தருமபுரி ஆதினம் பேட்டி

பட்டணப் பிரவேசம் நடத்த தமிழக முதல்வர் வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளதாக தருமபுரம் ஆதீனம் மயிலாடுதுறையில் பேட்டி அளித்துள்ளார். 

Background

மயிலாப்பூர் பிருந்தாவன் நகரைச் சேர்ந்த ஸ்ரீகாந்த், தன் மனைவி அனுராதா உடன் மகளின் பிரசவத்துக்காக கடந்த மார்ச் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். தம்பதி இருவரும் நேற்று காலை சென்னை திரும்பினர். அமெரிக்காவில் இருந்து அவர்களது மகள் சுனந்தா தொடர்புகொண்டபோது, பெற்றோர் இருவரின் செல்போனும் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. சுனந்தாவின் உறவினர்கள் மயிலாப்பூரில் உள்ள வீட்டுக்குச் சென்று பார்த்தபோது, தம்பதி இருவரும் அங்கு இல்லை எனத் தெரிந்தது. 
இதையடுத்து, மயிலாப்பூர் காவல் நிலையத்தில் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். வீட்டில் சோதனை நடத்திய போலீஸார் விசாரணையைத் துரிதப்படுத்தினர். குற்றவாளிகள் ஆந்திர மாநிலம் ஓங்கோல் சோதனை சாவடியில் இருப்பது தெரியவந்தை அடுத்து, ஆந்திர போலீஸாரின் உதவியுடன் அவர்களைக் கைது செய்தனர். 


விசாரணையில், ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டில் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வந்த நேபாளத்தைச் சேர்ந்த கிருஷ்ணா என்கிற பதன்லால் கிசன், டார்ஜிலிங்கில்  உள்ள தனது நண்பர் ரவியுடன் இணைந்து இந்த கொடூர சம்பவத்தை நடத்தியது தெரியவந்துள்ளது. நீண்ட நாட்களாக ஆடிட்டர் வீட்டில் இருந்து நகைகளைக் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்த கிருஷ்ணா, அமெரிக்காவில் இருந்து அவர்கள் வீடு திரும்பியதும், மயிலாப்பூரில் உள்ள வீட்டில் வைத்து கொலை செய்து, கிழக்கு கடற்கரை சாலையில் நெமிலிச்சேரியில் உள்ள பண்ணை வீட்டில் உடல்களைப் புதைத்துவிட்டு, 1 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளுடன் தப்பியுள்ளார்.


இதற்காக, கடந்த மாதமே தன் மனைவி மற்றும் குழந்தைகளை நேபாளத்தில் உள்ள தனது சொந்த ஊருக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்த சம்பவத்துக்கு ரவி மூளையாக செயல்பட்டதும், கிருஷ்ணாவின் தந்தை 20 ஆண்டுகளாக அந்த வீட்டில் பணிபுரிந்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனிடையே, வயதான தம்பதியின் சடலங்களைக் கைப்பற்றிய மாமல்லபுரம் போலீஸார், அவற்றை பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். கைதான இருவரும் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர்.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.