Breaking Live : TN Corona Update: தமிழ்நாட்டில் 439 பேருக்கு தொற்று பாதிப்பு..
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாட்டில் இன்று 439 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல், கொரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் மட்டும் அதிகபட்ச பாதிப்பாக இன்று ஒரே நாளில் 119 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்டக்குழு அவசர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் உக்ரைனில் இருந்து இந்தியர்களை மீட்க ஏழு விமானங்கள் அனுப்பப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த அவசர ஆலோசனை நடைபெறுகிறது.
ரஷ்யாவின் அணு ஆயுத தடுப்புப் படை தயார் நிலையில் இருக்க அதிபர் புடின் உத்தரவிட்டுள்ளார்.
ரஷ்யா-உக்ரைன் போரை நிறுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட வாய்ப்பு என் தகவல் வெளியாகியுள்ளது.
ரஷ்ய படைக்கு எதிராக போரிட்டு கார்கீவ் நகரை மீட்டதாக கார்கீவ் ஆளுநர் தகவல் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்ய படையெடுப்பால் உக்ரைனில் இருந்து கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் வெளியேறி அண்டை நாடுகளான போலந்து, மால்டோவா போன்ற நாடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதனால் 3.68 லட்சம் பேர் அகதிகளாக மாறியுள்ளனர் என்று ஐ.நா அவை அதிர்ச்சிகர தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
பெல்ஜியம் வான்வெளியில் ரஷ்ய விமானங்கள் பறக்க தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
ரஷ்ய படைகள் பலமுனைகளில் தாக்குதல் நடத்திவரும் வேளையில், ரஷ்யா போரை நிறுத்தாவிட்டால் நோட்டோ உடனான மோதலாக மாறிவிடும் என்று இங்கிலாந்து எச்சரிக்கை விடுத்துள்ளது.
உக்ரைனில் உள்ள சண்டை நடக்கும் பகுதிகளான மேற்கு பகுதி நகரங்களுக்கு யாரும் செல்ல வேண்டாம் என இந்திய தூதரகம் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியாது என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அறிவித்துள்ளார்.
உக்ரைன் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என்று ரஷ்யா அறிவித்துள்ளது.
உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்டு வரும் 4ஆவது விமனாம் அங்கு இருந்து புறப்பட்டுள்ளது.
உக்ரைன் நாட்டின் முக்கிய நகரான கார்கிவ் நகரில் நுழைந்த ரஷ்ய வீரர்கள் கார்கிவ் நகரை கைப்பற்றியுள்ளனர்.
உக்ரைன் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான கார்கிவிற்குள் ரஷ்ய படைகள் நுழைந்துள்ளன.
உக்ரைனில் இருந்த 5 தமிழ்நாடு மாணவர்கள் இன்று காலை சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் 5 மாணவர்களையும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் வரவேற்றார்
பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்து 723 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 29 லட்சத்து 16 ஆயிரத்து 117 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 21 நாட்களாக தொடர்ந்து 1 லட்சத்திற்கம் குறைவான கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 243 பேர் உயிரிழந்துள்ளனர்.
அணையின் நீர் மட்டம் 106.82 கன அடியாகவும், அணையின் நீர் இருப்பு 73.96 டி.எம்.சி ஆகவும் உள்ளது. இந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீரின் அளவு வினாடிக்கு 8,000 கன அடியில் இருந்தது 29 ஆம் தேதி மாலை மூடப்பட்டது.
மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்து வந்த நிலையில் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு வினாடிக்கு 542 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 542 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 532 கன அடியாக குறைந்தது.
உபி 5ம் கட்டத்தேர்தல் - காலை 9 மணி நிலவரப்படி 8.2% வாக்குகள் பதிவு
விருதுநகர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள சதுரகிரி மலைக்குச் செல்ல பக்தர்களுக்கு அனுமதி
தமிழ்நாடு இயக்குநர் சங்கத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் நடைபெற்று வருகிறது
உக்ரைனில் மீட்கப்பட்ட கேரள மாணவர்களும் சென்னை வந்தடைந்தனர்
உக்ரைனில் சிக்கிய 240 இந்தியர்களை மீட்டுக்கொண்டு 3வது விமானம் டெல்லி வந்தடைந்தது.
தமிழ்நாடு முழுவதும் இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. இதையடுத்து, சென்னை தேனாம்பேட்டையில் போலியோ சொட்டு மருந்து முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முழுவதும் இந்த பணியில் சுமார் 2 லட்சம் பணியாளர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த முகாம் தமிழ்நாடு முழுவதும் 43 ஆயிரத்து 51 இடங்களில் நடைபெற உள்ளது.
உத்தரபிரதேசத்தில் இன்று 5ம் கட்ட வாக்குப்பதிவு காலை தொடங்கியுள்ளது. அந்த மாநிலத்தில் உள்ள 61 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
Background
ரஷ்யா - உக்ரைன் இடையே யுத்தம் தீவிரம் அடைந்து வருகிறது. இதனால், உக்ரைனில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணியில் இந்திய அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. விமானங்களை தொடர்ந்து இயக்கி அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை ஹங்கேரி மற்றும் ருமேனியா நாடுகள் வழியாக மீட்டு இந்தியாவிற்குள் கொண்டு வரப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், ஏர் இந்தியா விமானம் மூலமாக உக்ரைனில் சிக்கித்தவித்து வந்த 252 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -