தமிழ்நாடு:
- இந்தியாவை சிதைக்கப் பார்க்கிறது பாஜக அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் விமர்சனம் - திராவிடம் என்ற சொல் பலருக்கு எரிச்சலை தருகிறது என பேச்சு
- பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மாரிமுத்து மாரடைப்பால் மரணம் - முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட அரசியல் தலைவர்கள் இரங்கல்
- பிரபல நடிகரும், திரைப்பட இயக்குநருமான மாரிமுத்து மரணம் - திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் கண்ணீர் அஞ்சலி
- விஜய் மக்கள் இயக்கத்தின் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் இன்று சென்னையில் நடைபெறுகிறது - முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு
- நடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பளர் சீமானுக்கு போலீசார் சம்மன்
- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஒவ்வொரு மாவட்டத்திலும் முதற்கட்டமாக 2 ஆயிரம் பேருக்கு வழங்கப்படும் என அமைச்சர் முத்துசாமி தகவல்
- ஒரே நாடு ஒரே தேர்தல் வேண்டாம் என்று சொல்பவர்கள் ஊழல்வாதிகள் என்று தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கடும் விமர்சனம்
- விபத்தில் சிக்கியவர்களை வாகனங்களில் இருந்து மீட்டெடுக்க அவசரகால மீட்புக்கான ‘வீரா' வாகனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- ஊட்டியில் தொட்டபெட்டா மலைச்சிகரத்திற்கு செல்லும் சாலை சீரமைப்பு பணி - செப்டம்பர் 13 ஆம் தேதி வரை சுற்றுலாப் பயணிகள் செல்ல தடை
- தமிழகத்தில் 10 சட்டமன்ற தொகுதிகளில் முதற்கட்டமாக ஒரு மினி விளையாட்டு மைதானம் கட்டப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
இந்தியா:
- 6 மாநிலங்களின் 7 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தல் - பாஜக 3 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 4 தொகுதிகளையும் கைப்பற்றியது
- இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு - பல்வேறு நாட்டு தலைவர்கள் வருகையால் டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு
- ஜி20 உச்சி மாநாடுக்கு வருகை தந்த பல நாட்டு தலைவர்கள் பிரதமர் மோடியுடன் சந்திப்பு
- ஜி-20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத்தலைவர் அளிக்கும் விருந்துக்கு மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அழைப்பு இல்லை - ராகுல்காந்தி கண்டனம்
- கர்நாடகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - மஞ்சள் அலர்ட் விடுப்பு
- தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பை நிறுத்திவிட்டோம் என்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி
- மதமும், அரசியலும் வெவ்வேறானவை. அவற்றை கலக்கக்கூடாது - சனாதன சர்ச்சை குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கருத்து
உலகம்:
- ஹாங்காங்கில் 140 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை - பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
- சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை விதிப்பு - வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயன்பாட்டை குறைக்கும் வகையில் நடவடிக்கை
- அணுமின் உற்பத்தியை மேம்படுத்துவது குறித்து தென்கொரியா-இந்தோனேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- ஸ்பெயின் அதிபர் பெட்ரோ சான்செஸூக்கு கொரோனா - ஜி 20 மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என அறிவிப்பு
- பிரேசில் நாட்டை நிலைகுலைய செய்த புயல் - இதுவரை 36 பேர் உயிரிழப்பு
விளையாட்டு
- ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை - வங்கதேசம் அணிகள் இன்று மோதல்
- தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி போராடி வெற்றி
- இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் மற்றொரு நாளில் போட்டி நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அறிவிப்பு
- இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி
- உலகக்கோப்பை தொடரில் அனைத்து ஆட்டங்களுக்கான பொது டிக்கெட்டுகள் விற்பனை - சில நிமிடங்களில் விற்று தீர்ந்தது