தமிழ்நாடு:



  • மகளிர் உரிமைத்தொகைக்காக குவிந்த மனுக்களை கண்டு நானே பயந்தேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

  • மறைந்த மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடல் தியான நிலையில் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி 

  • மறைந்த  மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உடலுக்கு ஓபிஎஸ், சசிகலா, ராமதாஸ், தமிழிசை சௌந்தரராஜன், நடிகர் சந்தானம் உள்ளிட்ட பலரும் நேரில் அஞ்சலி 

  • 4 நாட்கள் தொடர் விடுமுறை - சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய மக்களால் கடும் போக்குவரத்து நெரிசல் 

  • 4 நாட்கள் தொடர் விடுமுறையை முன்னிட்டு சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் 

  • வால்பாறை பகுதியில் ஆற்றில் குளிக்கச் சென்ற கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் 5 பேர் உயிரிழப்பால் சோகம் 

  • சாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தில் முதலமைச்சர் அமைதியாக இருப்பதை ஏற்க முடியாது - பாமக தலைவர் அன்புமணி விமர்சனம்

  • போதை பொருட்கள் விற்பனை மாநிலமாக தமிழ்நாடு மாறி வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு

  • நடிகை ஜெயப்பிரதா மீதான 6 மாத சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு - 15 நாட்களுக்குள் எழும்பூர் நீதிமன்றத்தில் சரணடைய உத்தரவு

  • சுதந்திர போராட்ட தியாகி என்.சங்கரய்யாவுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்க ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் தர வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி வலியுறுத்தல் 

  • மத்தியில் யார் ஆட்சிக்கு வந்தாலும் எங்களுக்கு கவலை இல்லை, தமிழ்நாடு மக்களின் நலனே முக்கியம் என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு 


இந்தியா: 



  • மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தேசிய தலைவர் நட்டா உள்ளிட்ட பலரும் இரங்கல் 

  • பேரிடர்களின்போது அவசரகால தகவல் தொடர்புகளை மேம்படுத்த நாடு முழுவதும் உள்ள செல்போன் பயனர்களுக்கு, அரசு அபாய எச்சரிக்கை ஒலியுடன் குறுஞ்செய்தி அனுப்பி பரிசோதனை 

  • மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவின் முதல் ரேபிட் ரயில் சேவை திட்டத்தை  துவங்கி வைத்தார் பிரதமர் மோடி 

  • கேரளாவில் நிபா வைரஸ் வௌவால்கள் மூலம் பரவியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக  மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தகவல் 

  • தமிழக அமைச்சர்களுக்கு எதிராக வழக்குகளை விரைந்து விசாரிக்க உத்தரவிட கோரிய மனு மீது மத்திய அரசு, தமிழ்நாடு அரசு பதிலளிக்க நோட்டீஸ் 

  • ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான ரூ.2 ஆயிரம் நோட்டுகள் மக்களிடம் இருப்பதாக ரிசர்வ் வங்கி தகவல் 

  • தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் விவசாயிகள் டிராக்டர் - மாட்டு வண்டிகளில் ஊர்வலம் 

  • மக்கள் நலனில் அக்கறை இல்லை, ஆட்சியில் நீடிப்பது குறித்து மட்டுமே பாஜக அரசு கவனம் செலுத்தி வருகிறது - பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு 


உலகம்: 



  • இந்தியாவில் இருக்கும் 41 தூதர்களை திரும்ப பெற்றது கனடா - இந்தியாவில் தங்கியிருக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி தெரிவித்துள்ளதால் பரபரப்பு 

  • இஸ்ரேலுடனான போரில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவு தெரிவித்து அரசு நிகழ்ச்சிகளை ரத்து செய்ய அல்ஜீரியா 

  • செவ்வாய் கிரகம் குறித்த தகவல்களை சேகரிக்க விண்கலம் அனுப்பியது நாசா

  • அபுதாபியில் நடைபெறும் 8வது உலக முதலீட்டாளர் மன்ற மாநாட்டில் தமிழ்நாட்டுக்கு விருது 

  • விற்பனையில் தொடர் சரிவு - 14 ஆயிரம் தொழிலாளர்களை செய்யும் நோக்கியா நிறுவனம் 


விளையாட்டு: 



  • உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இலங்கை - நெதர்லாந்து அணிகள் இன்று மோதல் 

  • உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து - தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதல் 

  • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானை 62 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா அணி வெற்றி 

  • பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய கடைசி 4 ஒருநாள் போட்டிகளிலும் சதம் விளாசி ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் சாதனை