தமிழ்நாடு:
- ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்த அண்ணாமலை இனி நீதிமன்றங்களுக்கு சுற்றுப்பயணம் செல்வார் என, திமுக செய்தி தொடர்பாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
- திமுக பிரமுகர்கள் பற்றிய சொத்து பட்டியலை வெளியிட்ட பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது வீட்டு வாடகைகூட நண்பர்கள்தான் கொடுக்கிறார்கள் என கூறியுள்ளார்.
- தமிழ்நாட்டில் அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என்றும் வெப்பநிலை 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
- கொரோனா அலைக்கு பிறகு இருதய நோய்கள் மற்றும் மாரடைப்பு மரணங்கள் நிறைய அளவில் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
- தமிழ்நாடு அரசின் மீதும் அமைச்சர்கள் மீதும் அண்ணாமலை சொன்ன குற்றச்சாட்டுகள் முகாந்திரம் அற்றவை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
- சாதி பார்த்திருந்தால் எடப்பாடியை முதல்வராக்கி இருக்க மாட்டேன் - சசிகலா பேட்டி
- கொரோனா பாதொப்பு அதிகரித்து வருவதால் சென்னை மற்றும் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் அணிவது கட்டாயம் - உயர்நீதிமன்ற பதிவாளர் ஜெனரல் அறிவிப்பு
- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஊர்வலமாக வந்து அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
- சென்னையில் நேற்று ஒரு சவரன் தங்கம் ரூபாய் 352 உயர்ந்து ரூ. 45,760 ஆக விற்பனை செய்யப்பட்டு வந்தது.
இந்தியா:
- மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் திடீர் திருப்பம் : கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் - விசாரணைக்கு நாளை நேரில் ஆஜராக உத்தரவு
- பஞ்சாப் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த 2 தமிழக வீரர்கள் உடல் சொந்த ஊரில் அடக்கம்: முழு ராணுவ மரியாதை அளிக்கப்படவில்லை என உறவினர்கள் மறியல்
- 19 ஆண்டுகளாக வசித்து வந்த அரசு பங்களாவை காலி செய்தார் ராகுல் காந்தி
- அம்பேத்கரின் 125 அடி உயர வெண்கல சிலை திறப்பு ; 2024ல் தேர்தலிலும் எங்களது ஆட்சிதான் - தெலுங்கானா முதலமைச்சர் பேச்சு
- நாட்டு மக்களிடையே பிளவை ஏற்படுத்த அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவோரே தேச விரோதிகள் - சோனியா காந்தி கடும் தாக்கு
- உலகின் பழமையான மொழி தமிழ்; ஒவ்வொரு இந்தியரும் தமிழ் மொழி குறித்து பெருமைப்படுவதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
- கடந்த 24 மணி நேரத்தில் 11,109 நபர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தமாக கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 50,000-ஐ நெருங்கியது.
உலகம்:
- மொசாம்பிக் அதிபரை இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
- இந்தோனேசியாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.0 என பதிவாகி உள்ளது.
- அமெரிக்க ராணுவ ரகசியங்களை கசியவிட்ட 21 வயது விமானப்படை ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார். ஜப்பான் கடற்பகுதி அருகே மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியாவுக்கு ஜப்பான் மற்றும் தென்கொரியா நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளது.
- பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கானுக்கு 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கி லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
விளையாட்டு:
- சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் கொல்கத்தா அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
- பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மெதுவாக பந்துவீசிய காரணத்திற்காக ஹர்திக் பாண்ட்யாவிற்கு ரூபாய் 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
- ஐபிஎல் தொடரில் இன்று மாலை 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோத இருக்கின்றனர்.
- அதேபோல் இரவு 7 மணிக்கு தொடங்கும் மற்றொரு ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோத இருக்கின்றன.