தமிழ்நாடு:  



  • திருவண்ணாமலையில் ஒரே நாளில் நான்கு ஏ.டி.எம் களை உடைத்து கொள்ளை; கொள்ளையர்களை பிடிக்க துணை கண்காணிப்பாளர் தலைமையில் 6 தனிப்படை அமைப்பு. 

  • சென்னை நகைக்கடை ஏ.டி.எம்களில் கொள்ளை அடித்தது ஒரே கும்பலா? ஒரே பாணியில் கொள்ளை நடந்துள்ள நிலையில் ஆந்திரா விரைந்த தனிப்படை. 

  • கொள்ளை கும்பலை பிடிக்க மாநிலம் முழுவதும் வாகன தணிக்கை; மாநில எல்லையில் தீவிர சோதனை.

  • ஈரோடு கிழக்கில் அமைச்சர்கள் செஞ்சி மஸ்தான், செந்தில் பாலாஜி தீவிர பிரச்சாரம். 

  • மக்களின் வரவேற்பு ஈரோட்டில் வெற்றியைத் தரும் என ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் பேச்சு. 

  • இடைத்தேர்தல் பணிகள் குறித்து நிர்வாகிகளுடன் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனை; புதிய திட்டங்களை திமுக அரசு நிறைவேற்றவில்லை என குற்றச்சாட்டு. 

  •  உலகிலேயே பொருளாதாரத்தில் வேகமாக வளரும் நாடாக இந்தியா உள்ளது - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு

  • மதுரையில் பிரதமர் மோடி குறித்த ஆவண படத்தை வெளியிட எதிர்ப்பு; பாஜக மாவட்ட தலைவர் உட்பட 7 பேர் கைது. 

  •  அமராவதி ஆற்றின் தடுப்பணையில் இரண்டு முதலைகள் ; கவனமுடன் இருக்க பொதுமக்களுக்கு எச்சரிக்கை


 


இந்தியா:



  • உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சி வேகமடையும்; ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு 

  • பீகார், அருணாச்சல பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களுக்கு ஆளுநர்கள் நியமனம்; நியமன உத்தரவசி பிறப்பித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு. 

  • ஜார்கண்ட் மாநில ஆளுநர் ஆகிறார் தமிழ்நாடு பாஜக மூத்த நிர்வாகி சி.பி.ராதாகிருஷ்ணன்; மணிப்பூர் ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகலாந்து ஆளுநராக நியமனம். 

  • ஜார்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்ட சி.பி. ராதாகிருஷ்ணனுக்கு முதலமைச்சர் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து

  • அகமதாபாத்தில் தமிழ்ச்சங்கம் சார்பில் திருவள்ளுவர் சிலை திறப்பு; தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்பு 

  • அசாம் மாநிலத்தில் நில அதிர்வு; ரிக்டர் அளவுகோலில் 4 ஆக பதிவு.  

  • சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பு; 17ஆம் தேதி வரை திறந்து இருக்கும். 


உலகம்



  • துருக்கி சிரியாவில் நிலநடுக்கத்தால் உயிரிழந்த மக்களின் எண்ணிக்கை 34 ஆயிரமாக உயர்வு. 


விளையாட்டு 





    • மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இந்திய அணி.

    • கேலோ இந்தியா ஜூனியர் விளையாட்டு போட்டியில் மகாராஷ்டிரா ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் வென்றது. தமிழ்நாடு 8வது இடம் பிடித்தது.