மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: அனைத்தையும் அறிய, காலை தலைப்புச்செய்திகள்.. உங்களுக்காக ஏபிபி பக்கத்தில்.. இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
- முதலமைச்சர் முக ஸ்டாலின் கொண்டுவந்த ஆளுநருக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றம்
- ஆளுநருக்காக தமிழ்நாடு அரசு ஒதுக்கிய நிதி முறைகேடாக செலவழிக்கப்பட்டுள்ளது- நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு
- தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மனநல மறுவாழ்வு மையங்களிலும் விதிகளை பின்பற்றுகிறார்களா..? ஆய்வு நடத்த தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
- தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு எதிராக செயல்பட்டு ராஜ்பவனை ஆளுநர் அரசியல் பவனாக மாற்றிக் கொண்டிருக்கிறார் - சட்டப்பேரவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் குற்றச்சாட்டு
- முன்னாள் தலைமை தேர்தல் அதிகாரியும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான நரேஷ் குப்தா காலமானார். அவரது மறைவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 386 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 10ஆம் வகுப்பு ஆங்கில வினாத்தாளில் 3 கேள்விகள் முறையாகக் கேட்கப்படவில்லை என்பதால் அவற்றுக்கு உரிய மதிப்பெண்கள் வழங்கவேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று தென் மற்றும் வட தமிழகத்தில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா:
- இந்திய கம்யூனிஸ்ட், திரிணாமுல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுக்கு தேசிய அங்கீகாரம் ரத்து; ஆம் ஆத்மி கட்சி தேசிய கட்சியாக அங்கீகரிப்பு
- கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை மீனவர்களுக்கு வழங்கல்
- எல்லையில் ஒரு அங்குலம் கூட யாராலும் அபகரிக்க முடியாது; அருணாச்சலத்தில் அமித்ஷா பேச்சு
- காங்கிரஸ் 166 வேட்பாளர்களை அறிவித்த பின்னும் கர்நாடகா பாஜக பட்டியல் வெளிவர தாமதம்
- சிறுவனுக்கு முத்தமிட்ட விவகாரம் சர்ச்சை ஆன நிலையில், மதகுரு தலாய் லாமா பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார்.
- இந்தியாவில் டிவி, ஃபிரிட்ஜ், போன், ஏசி ஆகியவற்றை மாத தவணையில் வாங்குவதை தொடர்நது தற்போது, மாம்பழத்திற்கு இ.எம்.ஐ.யில் வாங்கலாம் என்ற அறிவிப்பு மக்களை வியக்க வைத்துள்ளது.
- இந்தியாவில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35,199 ஆக உயர்ந்துள்ளது என மத்திய சுகாதார துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை, ஹெலிகாப்டரில் பயணிக்கும்போது படம்பிடித்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ளார்.
- உத்தரகாண்ட் அடுத்த ஹல்த்வானியில் உள்ள சிறையில் 44 கைதிகளுக்கு மனித நோயெதிர்ப்பு குறைபாடு (HIV) வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம்:
- அமெரிக்காவின் கைப்பாவையாக தென்கொரியா செயல்படுவதாக அந்நாட்டின் தகவல் தொடர்பை வடகொரியா துண்டித்தது.
- பிரான்சில் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர்.
- பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடியால் வழிப்பறி, கொள்ளை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- நைஜீரியாவில் பஸ்-லாரி நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழப்பு.
- துபாயில் பி7 பதிவு எண் கொண்ட காரின் நம்பர் ப்ளேட் ரூ.122 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டு உலகின் விலை உயர்ந்த நம்பர் ப்ளேட் என்ற கின்னஸ் சாதனையை படைத்துள்ளது.
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி - மும்பை அணிகள் இன்று பலப்பரீட்ச்சை நடத்த இருக்கின்றன.
- பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி ஒரு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றிப்பெற்றது.
- ஐபிஎல் தொடரில் தோனிக்கு எதிராக விளையாடும்போது எரிச்சலாக இருக்கும் என, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion