சந்திரபாபுநாயுடு பொதுக்கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு
ஆந்திர மாநிலத்தின் நெல்லூரில் சந்திரபாபுநாயுடு பங்கேற்ற பொதுக்கூட்டத்தின் நெரிசலில் சிக்கி 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Breaking News LIVE: கோவை கார் வெடிப்பு வழக்கு- மேலும் 2 பேர் கைது!
கோயம்புத்தூரில் காரில் சிலிண்டர் வெடித்த விபத்தில் மேலும் இருவரை கைது செய்துள்ளது என்.ஐ.ஏ.
Breaking News LIVE: பொங்கல் பரிசு - அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்பாட்டம் ரத்து!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்க கோரி வரும் ஜனவரி 2 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Breaking News LIVE: பொங்கல் பரிசு - அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்ட ஆர்பாட்டம் ரத்து!
பொங்கல் பரிசுத் தொகுப்பில் செங்கரும்பை வழங்க கோரி வரும் ஜனவரி 2 ஆம் தேதி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், ஆர்ப்பாட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Pongal Gift: பொங்கல் பரிசில் கரும்பும் வழங்கப்படும் - முதலமைச்சர்
பொங்கல் பரிசுப் பொருட்களுடன் கரும்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மலம் கலந்த குடிநீரை குடித்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் - நீதிமன்றத்தில் முறையீடு..!
புதுக்கோட்டை மாவட்டத்தில் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்ட விவகாரத்தில், பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சண்முகம் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முறையிட்டுள்ளார்.
பொங்கலுக்கு கரும்பு வழக்கு - ஜனவரி 2க்கு ஒத்திவைப்பு..
பொங்கலுக்கு கரும்பு வழங்குவது குறித்த வழக்கினை ஜனவர் 2ஆம் தேதிக்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
சத்யமூர்த்திபவனில் கக்கன் சிலை திறப்பு..!
காங்கிரஸ் கட்சியின் 138வது ஆண்டு தொடக்கத்தினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த கக்கன் அவர்களின் மார்பளவுசிலை சத்தியமூர்த்தி பவனில் திறக்கப்பட்டுள்ளது.
சத்யமூர்த்திபவனில் கக்கன் சிலை திறப்பு..!
காங்கிரஸ் கட்சியின் 134வது ஆண்டு தொடக்கத்தினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர், மறைந்த கக்கன் அவர்களின் மார்பளவுசிலை ட்சத்தியமூர்த்தி பவனில் திறக்கப்பட்டுள்ளது.
Covid Restrictions in TN: "முகக்கவசம் அணியவேண்டும்.. இதை பின்பற்றுங்கள்
கொண்டாட்டங்களின்போது முகக்கவசம் அணிந்து கொரோனா கட்டுப்பாடுகளுடன் இருக்கவேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமனியன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் பந்த்..!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என அதிமுக செயலாளர் அன்பழகன் இன்று பந்த்-க்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். பந்த்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டதால் பேருந்துகள் இயக்கப்படவில்லை. ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை.
DMK: திமுக அனைத்து நிர்வாகிகள் கூட்டம்..!
திமுகவின் அனைத்து அணிகளின் நிர்வாகிகள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறவுள்ளது.
Background
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சென்னையில் இருந்து நாகர்கோவில்' திருவனந்தபுரம் பகுதிகளுக்கு சிறப்பு ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது, ரயில்வே நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06021) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 12 அன்று இரவு 9.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - சென்னை எழும்பூர் சிறப்பு கட்டண ரயில் (06022) திருநெல்வேலி யிலிருந்து ஜனவரி 13 அன்று மதியம் 1 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு சென்னை எழும்பூர் சென்று சேரும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்பு பெட்டி, 2 குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3 குளிர்சாதன குறைந்த கட்டண மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
நின்று செல்லும் இடங்கள்
செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். சென்னை எழும்பூர் சிறப்பு கட்டணம் ரயில் கூடுதலாக தாம்பரம், மாம்பலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும்.
தாம்பரம் - நாகர்கோவில் சிறப்பு கட்டண ரயில் (06041) தாம்பரத்தில் இருந்து ஜனவரி 13 அன்று இரவு 7.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.10 மணிக்கு நாகர்கோவில் சென்று சேரும். மறுமார்க்கத்தில் நாகர்கோவில் - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06042) ஜனவரி 16 அன்று நாகர்கோவிலில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 7.30 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில் வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் ஒரு குளிர்சாதன முதல் வகுப்புடன் கூடிய இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, ஒரு குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதிப்பெட்டி, 13 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதியுள்ள பெட்டி ஆகியவை இணைக்கப்படும்.
தாம்பரம் - திருநெல்வேலி சிறப்பு கட்டண ரயில் (06057) ஜனவரி 16 அன்று தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.00 மணிக்கு திருநெல்வேலி சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருநெல்வேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06058) திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 17 அன்று இரவு 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 09.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 4 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வசதி உள்ள பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
திருவனந்தபுரம் கொச்சுவேலி - தாம்பரம் சிறப்பு கட்டண ரயில் (06044) கொச்சுவேலியில் இருந்து ஜனவரி 17 அன்று காலை 11.40 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.20 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் தாம்பரம் - கொச்சுவேலி சிறப்பு கட்டண ரயில் (06043) தாம்பரத்திலிருந்து ஜனவரி 18 அன்று காலை 10.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 3.20 மணிக்கு கொச்சுவேலி சென்று சேரும்.
நின்று செல்லும் இடங்கள்
இந்த ரயில்கள் திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில் டவுன், வள்ளியூர், திருநெல்வேலி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், கடலூர், துறைமுகம் சந்திப்பு, விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயில்களில் 16 குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு தூண்கள் வசதி பெட்டிகள், 2 இரண்டாம் வகுப்பு பொது பெட்டிகள் ஆகியவை இணைக்கப்படும்.