Breaking News : ஓராண்டு நிறைவு : முதலமைச்சருக்கு ஆளுநர் வாழ்த்து
TN Assembly Live Update: சட்டப்பேரவையில் நடக்கும் சம்பவங்கள் உடனுக்குடன் இங்கே..
திமுக ஆட்சி ஓராண்டு ஆனதையொட்டி முதலமைச்சருக்கு முக ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
விசாரணை கைதி விக்னேஷ் மரணம் தொடர்பாக மேலும் 4 போலீசார் எஸ். சி, எஸ். டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமை காவலர் குமார், ஊர்காவல்படை வீரர் தீபக் மற்றும் 2 ஆயுதப்படை காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட அரசுப்பணிகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. திருச்சி சிவாவின் மகன் சூர்யா, மாநில தலைவர் அண்ணாமலையை சந்தித்து விரைவில் பாஜகவில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி அக்கட்சியை சேர்ந்தவர்கள் கொண்டாடி வரும் நிலையில், திமுக அரசின் ஓராண்டை விமர்சிக்கும் வகையில் சென்னை முழுவதும் அதிமுக சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
அனைத்து தொகுதிகளிலும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும்
நகர்ப்புறங்களில் 708 நகர்ப்புற மருத்துவ நிலையங்கள் அமைக்கப்படும்
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 6 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கு சிறப்பு திட்டம்
டெல்லியைப் போல் இனி தமிழ்நாட்டிலும் தகைசால் பள்ளிகள் (School Of Excellence) உருவாக்கப்படும்- முதலமைச்சர் அறிவிப்பு
அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இனி காலை வேளைகளில் சிற்றுண்டி வழங்கப்படும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
துளிபோன்ற ஓராண்டில் கடல்போன்ற சாதனை : முதலமைச்சர் சட்டமன்றத்தில் பேச்சு
திமுக ஆட்சிக்கு வந்து ஓராண்டு ஆனதையொட்டி அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். அமைச்சர்களும், நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினார்கள்.
திமுக ஆட்சி ஒராண்டு ஆனதையொட்டி கருணாநிதி படத்துக்கு மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். கோபாலபுரம் இல்லத்தில் தாயார் தயாளு அம்மாளிடமும் முதலமைச்சர் வாழ்த்து பெற்றார்.
Background
துளிபோன்ற இந்த ஓராண்டில் கடல்போன்ற ஓராண்டு சாதனைகளை செய்துள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியுள்ளார்.
திமுக ஆட்சி ஓராண்டு நிறைவுபெறுவதையொட்டி தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதில், ”துளிபோன்ற ஓராண்டு காலத்தில் கடல்போல் திமுக அரசு சாதனைகளை செய்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்காக கடந்த ஓராண்டில் உண்மையுடன் உழைத்தேன் என்ற நம்பிக்கையுடன் பேசுகிறேன். திமுக அரசின் திட்டங்கள் சென்று சேராத இடமே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது” என தெரிவித்துள்ளார்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -