தமிழகத்தை பொருத்தவரைக்கும் வரவிருக்கும் 2026ம் ஆண்டுக்கான தேர்தல் வேலைகளில் அனைத்து கட்சியினரும் தங்களது தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு கட்சிகளும் 2026 தேர்தலில் வெற்றி பெற வியூகங்கள் எப்படி வகுப்பது? எப்படி தேர்தல் களத்த கையாள்வது என எதிர்பார்ப்புகள் இருந்து வரும் சூழலில், தற்போது இருக்கும் ஆளுங்கட்சியான திமுவினரும் தேர்தல் பணிகளில் அதிரடியாக தேர்தல் பணிகளில் தீவிரமாக இறங்கியுள்ளனர்.
இந்த நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வரும் 22ஆம் தேதி தமிழ்நாடு வர இருக்கிறார். தமிழ்நாட்டில் வரும் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. திமுக தற்போது இருக்கும் அதே கூட்டணியே 2026 சட்டமன்றத் தேர்தலிலும் தொடரும் எனத் தெரிவித்து வருகிறது. 2024ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்ட அதிமுக, 2026 சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் கூட்டணி அமைத்துள்ளது.
இதனால், அதிமுக மற்றும் கூட்டணியில் ஏற்கனவே இருந்த அமமுக, பாமக, தேமுதிக, ஓ.பி.எஸ். அணி உள்ளிட்டவற்றின் நிலைப்பாடு தெளிவாகத் தெரிவிக்கப்படவில்லை.இந்தத் தேர்தலுக்கு புதிதாக வந்துள்ள தவெக விஜய்யும், தனது தேர்தல் பணிகளைத் துவங்கி தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார். அக்கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு வரும் 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது. மேலும், தவெகவின் பூத் கமிட்டி ஆலோசனை உள்ளிட்ட விவகாரங்களிலும் கவனம் செலுத்தி அக்கட்சி செயல்பட்டு வருகிறது. திமுக, அதிமுக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும், தற்போதே மக்களைச் சந்திக்கப் புறப்பட்டுவிட்டனர். இப்படி தமிழ்நாடு அரசியல் களத்தில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக இயங்கி வருகின்றன.
பாஜக, அதிமுக கூட்டணியில் இருந்தாலும், தமிழ்நாட்டில் தனிப்பட்ட வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகிறது. அதற்கான பணிகளையும் அக்கட்சி தொடர்ந்து செய்து வருகிறது.சட்டமன்றத் தேர்தல் நெருங்க இருக்கும் நிலையில், அக்கட்சியின் தேசியத் தலைவர்களில் முக்கியமானவர்களான பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் தொடர்ந்து தமிழ்நாட்டிற்கு வருகை தந்துகொண்டிருக்கின்றனர்.அதன்படி வரும் 22ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வரவிருக்கிறார். அன்றைய தினம், நெல்லையில் நடைபெறும் பாஜக பூத் முகவர்கள் மாநாட்டில் அமித்ஷா பங்கேற்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பாஜக பூத் முகவர்கள் மாநாடு முதலில் நேற்று (16ஆம் தேதி) திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், அக்கட்சியின் மூத்த தலைவரும், நாகாலாந்து ஆளுநருமான இல. கணேசன் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து பாஜகவின் நிகழ்ச்சிகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட அந்த பூத் முகவர்கள் மாநாடு வரும் 22ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வருகை தர இருக்கிறார்.