திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனத்திற்காக வரும் பக்தர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிக கூட்ட நெரிசல் காரணமாக பக்தர்கள் பல மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். திருப்பதி வரும் பக்தர்கள் அங்கப்பிரதட்சனம் செய்தல், மொட்டையடித்தல் போன்ற நேர்த்திக் கடன்களை செய்வது வழக்கம். இதற்காகு டோக்கன் பெறுவதற்காக பல மணி நேரம் வரிசையில் காத்திருந்து வாங்க வேண்டிய சூழ்நிலை இருந்துவந்தது. பக்தர்களின் சுமையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் திருப்பதி தேவஸ்தான நிர்வாகம், டோக்கன்களை வரிசையில் நின்று வாங்குவதற்கு பதிலாக, ஆன்லைனில் வாங்குவதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.


இந்த நிலையில், திருமலையில் உள்ள வெங்கடேஸ்வரா கோவிலின் உண்டியலில் கடந்த ஜுலை மாதம் மட்டும் 139.46 கோடி ரூபாய் காணிக்கையாக வந்துள்ளதாக திருமலை திருப்பதி தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் திருப்பதி திருமலை தேவஸ்தான வரலாற்றில் ஒரு மாதத்தில் அதிகப்பட்சமாக கிடைத்த காணிக்கை என்ற சிறப்பையும், அதிக அளவு தொகை வந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.


இதற்கு முன்னதாக கடந்த மே மாதத்தில் கடந்த மே மாதம் உண்டியல் வருமானம் ரூ.130 கோடியைத் தாண்டியது. கடந்த மே மாதத்தில் மட்டும் கோடை விடுமுறை காரணமாக சுமார் 22.62 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த காலகட்டத்தில் 1.86 கோடி லட்டு பிரசாதங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. 10.72 லட்சம் பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.


ஒரே நாளில் ரூ.10 கோடி வசூல்:


 கடந்த ஜூன் 6ம் தேதி ஒரே நாளில் திருநெல்வேலியைச் சேர்ந்த தொழிலதிபர் 7 கோடி ரூபாயையும், 3 தனியார் நிறுவனங்கள் இணைந்து  தலா ஒரு கோடி ரூபாயையும் என மொத்தமாக 10 கோடி ரூபாயை காணிக்கையாக வழங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, கடந்த ஜூலை மாதம் முதல் 5 நாட்களில் 5 கோடி ரூபாயும், அதே மாதத்தில் 4 ம் தேதி மட்டும் 6 கோடியே 18 லட்சம் ரூபாயும் காணிக்கையாக கிடைத்துள்ளது.


அதிகரிக்கும் பக்தர்கள் எண்ணிக்கை :


திருமலை திருப்பதி கோயிலில் பக்தர்களின் தரிசனங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பிப்ரவரியில், திருமலை கோவிலில் 10.97 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்த நிலையில், மார்ச்சில் 19.72 லட்சமாகவும், ஏப்ரலில் 20.64 லட்சமாகவும், மே மாதத்தில் 22.62 லட்சமாகவும், ஜூன் மாதத்தில் 23.23 லட்சமாகவும் உயர்ந்துள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண