ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் கொல்லப்படுட்ட மூன்று வீரர்களில் தமிழகத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன் என்ற இராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் இன்று அதிகாலை ரஜெளரி பகுதியில் உள்ள ராணுவ முகாமிற்கு அத்துமீறி நுழைந்த பயங்கவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் மூன்று இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அதில் ஒருவர் மதுரை புதுப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.
இந்தத் தாக்குதலில் இந்திய இராணுவ வீரர்கள் சுபேதர் ராஜேந்திர பிரசாத்( Subedar Rajendra Prasad), மனோஜ் குமார் (Manoj Kumar), மற்றும் தமிழ்நாடு வீரர் லட்சுமணன் (Lakshmanan) வீர மரணம் அடைந்துள்ளனர் என்று காஷ்மீர் காவல்துறை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாதிகள் தாக்குதல்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ரஜௌரி மாவட்டத்திலிருந்து 25 கிலோ மீட்டர் தொலைவில் இந்திய ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் இன்று அதிகாலை புகுந்த பயங்கரவாதிகள் தற்கொலைப் படையினர் ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், மூன்று ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். மேலும், சிலர் காயமடைந்ததாக காஷ்மீர் காவல் துறையினர் வெளியிட்டுள்ள தகவலில் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் ஈடுபட்ட இரண்டு பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
அந்தப் பகுதியில் இது தொடர்பாக, இராணுவ வீரர்கள் தேடுதல் நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினத்தை கொண்டாட தயாராகி வரும் நிலையில், ராணுவ வீரர்கள் மீதான தாக்குதல் நடத்தியிருப்பது அதிர்ச்சியையை ஏற்படுத்தி உள்ளது. மேலும், ஜம்மு-காஷ்மீர் பகுதியில் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்