காடுகளில் சில நேரங்களில் விலங்குகள் செய்யும் ஒவ்வொரு விஷயங்கள் எதார்த்தமாக வீடியோவாக எடுக்கப்பட்டு வைரலாகும். இது மாதிரியான வீடியோக்கள் ரசிக்கும் படியாக இருக்கும். நம்மை அறியாமல் நம் கவனம் முழுவதும் அந்த விலங்குகளின் செயல்களின் மீது திரும்பும். 


அப்படி இருக்க, காடு ஒன்றில் பசிகொண்ட புலி ஒன்று, தனது பசியை போக்கி கொள்வதற்காக காட்டெருமையை துரத்திய வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா சாஹூ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு கீழ் அவர் கொடுத்த தலைப்பில், “காடுகளில் உயிர்வாழ்வது இரை மற்றும் வேட்டையாடுவோர் ஆகிய இரண்டிற்கும் சவாலானதாக உள்ளது” என்று பதிவிட்டு இருந்தார். இந்த வீடியோவை பதிவிட்ட சில மணிநேரங்களில் 250,000 லைக்ஸ்களை கடந்து வருகிறது. இந்த வீடியோ எங்கே, எப்போது எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. 


வீடியோவில் காட்டெருமை தன் உயிரை காப்பாற்றிகொள்ள பல மீட்டர் தூரம் ஓடியது. ஒரு சிலர் இந்த வீடியோவில் கீழ், ”புலியை விட 2 மடங்கு எடைகொண்ட எருமை ஓடி புலியை வென்றது சாதாரணமான விஷயம் அல்ல” என்றார். 






மற்றொரு பயனர், “ எருமை அவ்வளவு தூரம் ஓடி உயிர் பிழைத்ததை பார்ப்பது நன்றாக இருந்தது, இது இயற்கையின் விதி என்று எனக்கு நன்றாக தெரியும். ஆனால், எப்போதும் இரை மீது மட்டுமே அனுதாபம் ஏற்படுகிறது” என்றார். 






இதேபோல் கடந்த மாதம் ஒரு பழங்குடியின தொழிலாளர்கள் குச்சி மற்றும் மூங்கில் பிரம்புகளால் யானை பொம்மைகளை எப்படி உருவாக்கினார்கள் என்ற வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி சுப்ரியா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அதில் “ கூடலூரில் உள்ள தொலைதூர அலகுக்கு அற்புதமான வருகை, அங்கு இளம் பழங்குடியினர் ஆக்கிரமிப்பு இனமான லாந்தனாவில் இருந்து வாழ்க்கை அளவு யானை மாதிரிகளை உருவாக்குகிறார்கள். சுமார் 100 பழங்குடியினர் தங்கள் கைகளால் மந்திரம் செய்கிறார்கள்.” என்ற தலைப்புடன் பதிவிட்டார். இந்த வீடியோவும் அதிகளவில் பார்வையாளர்களை கடந்து இணையத்தில் வைரலானது.