மேலும் அறிய

’’தேசம் உங்களை மன்னிக்காது; நீங்கள் அடையப்போவது என்ன?’’ மம்தா பானர்ஜிக்கு ஜோதிமணி பதிலடி!

பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில், நாட்டின் நலன்கருதி எதிர்க் கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும். நீங்களும் அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும் நல்லது- ஜோதிமணி.

காங்கிரஸ், திமுக ஆகிய இரு கட்சிகளும் பாஜகவுடன் சமரசம் செய்துள்ளன எனும் மம்தாவின் கருத்துக்கு எம்.பி.ஜோதிமணி பதிலடி கொடுத்துள்ளார். இந்த தேசம் உங்களை மன்னிக்காது என்றும் அவர் சாடியுள்ளார்.

இதுகுறித்து ஜோதிமணி எம்.பி. கூறி உள்ளதாவது:

’’இந்தியாவின் ஒரு மூத்த அரசியல்வாதி, மூன்று முறை மேற்கு வங்கத்தின் முதலமைச்சர் மம்தா பானர்ஜி இப்படிக் கொஞ்சமும் பொறுப்பில்லாமல், உண்மைக்குப் புறம்பாக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், திமுக கட்சிகள், பாஜகவோடு ரகசிய உடன்பாடு வைத்துள்ளன என்று பேசுவது அபத்தமானது மட்டுமல்ல கடுமையான கண்டனத்திற்குரியது.

ஒவ்வொரு தினமும் யுத்தம்

தமிழ்நாட்டில் நாங்கள் பாஜகவிற்கு எதிராக ஒவ்வொரு தினமும் யுத்தம் நடத்திக் கொண்டுள்ளோம். எமது மொழி, இனம், பண்பாடு, வளர்ச்சி அனைத்திற்கும் எதிராக உள்ள பாஜகவை இந்தத் தேர்தலில் தோற்கடிப்பதே எங்கள் இலக்கு. அஇஅதிமுக முகமூடி அணிந்து கூட பாஜக தமிழ்நாட்டில் கால்பதித்து விடக்கூடாது என்பதில் எமது தமிழினம் உறுதியோடு உள்ளது.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்  ராகுல் காந்தி அச்சமற்று அயராது மோடி அரசிற்கும், பாஜகவிற்கும் எதிராக சமரசமற்ற போராட்டத்தை நடத்திவருகிறார். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக முதலமைச்சர் திமுகவின் தலைவர் மு.க. ஸ்டாலின், பாஜகவோடு சமரசமற்று போராடி வருகிறார்.

உங்கள் மீது அவதூறு பரப்பியதில்லை

தேசிய அளவில் நாடாளுமன்றத்தில் நாங்கள் பாஜக அரசை எதிர்த்து நடத்தும் போராட்டத்தில் திமுக எப்பொழுதும் எங்கள் பக்கம் நிற்கிறது. ஆனால் திரிணாமுல் காங்கிரஸ் பல நேரங்களில் அப்படிச் செயவதில்லை. ஆனாலும் உங்கள் மீது எந்த அவதூறுகளையும் நாங்கள் பரப்பியதில்லை. ஏனென்றால் பாஜகவிற்கு எதிரான யுத்தத்தில், நாட்டின் நலன்கருதி எதிர்க் கட்சிகள் ஒன்றாகவே பயணிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நீங்களும் அந்த நிலைப்பாட்டிலேயே நில்லுங்கள். அதுதான் மேற்குவங்கத்திற்கும், இந்தியாவிற்கும் நல்லது.

எந்த மாநிலத்துக்கும் பாஜக கூடாது

நீங்கள் 15 ஆண்டுகாலம் செய்த சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேளுங்கள். மக்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள். கூட்டணிக் கட்சிகளை அவதூறு செய்வதன் மூலம் நீங்கள் அடையக்கூடியது ஒன்றும் இல்லை. தமிழ்நாட்டில் மட்டுமல்ல கேரளம், புதுச்சேரி, அஸ்ஸாம், மேற்குவங்கம் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும் பாஜக வெல்லக் கூடாது என்பதே எமது நிலைப்பாடு.

அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவைத் தோற்கடித்து, இந்தியாவைப் பாதுகாக்க ராகுல் காந்தி தலைமையேற்று நடத்தும்   போராட்டத்தில் நீங்கள் பங்கேற்காவிட்டாலும் பரவாயில்லை. பலவீனப்படுத்த முயற்சி செய்யாதீர்கள். இந்த தேசம் உங்களை மன்னிக்காது’’ என்று ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi:
PM Modi: "பத்து ரூபாய் கொடுக்கணும்ல?" - கடைக்காரரிடம் கேட்டு காரப்பொறி சாப்பிட்ட பிரதமர் மோடி
11 லட்சம் லிட்டர் பாலை ஆற்றில் கொட்டியிருக்கீங்களே.. ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே.! முன்னாள் நீதிபதி ஓஹா
11 லட்சம் லிட்டர் பாலை ஆற்றில் கொட்டியிருக்கீங்களே.. ஏழைக் குழந்தைகளுக்கு கொடுத்திருக்கலாமே.! முன்னாள் நீதிபதி ஓஹா
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Narendra Modi: பெண்களே என்னை மன்னிச்சுடுங்க.. பிரதமர் மோடி வெளியிட்ட வீடியோ.. என்னாச்சு!
Hydrogen Stove; தண்ணீலே அடுப்பா... எல்பிஜி பற்றக்குறைக்கு புதிய தீர்வு.. விலை மற்றும் விவரங்கள்
Hydrogen Stove; தண்ணீலே அடுப்பா... எல்பிஜி பற்றக்குறைக்கு புதிய தீர்வு.. விலை மற்றும் விவரங்கள்
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
TN Election Campaign: ஸ்டாலின், இபிஎஸ், விஜய் இன்று எங்கே பரப்புரை? இதுதான் இன்று லிஸ்ட்
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
MK Stalin: பெண்களுக்கு பாதுகாப்பில்லையா? - வேடிக்கையா இருக்கு.. முதல்வர் ஸ்டாலின் பதில்!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
Punjab Kings: பீஸ்ட் மோடில் பஞ்சாப்! எதிரணியை கதிகலங்க வைக்கும் பாண்டிங் - ஸ்ரேயாஸ் காம்போ!
MK Stalin: விஜய் பற்றி பேச மறுப்பது ஏன்? - உண்மையை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
MK Stalin: விஜய் பற்றி பேச மறுப்பது ஏன்? - உண்மையை சொன்ன முதல்வர் மு.க.ஸ்டாலின்!
TN Election Campaign: போடுங்கம்மா ஓட்டு! நாளை சாயங்காலத்துடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
TN Election Campaign: போடுங்கம்மா ஓட்டு! நாளை சாயங்காலத்துடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
Donald Trump: இனியும் நல்லவனாக இருக்க மாட்டேன்.. ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
Donald Trump: இனியும் நல்லவனாக இருக்க மாட்டேன்.. ஈரானுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை!
விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்து 23 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் சொல்வது என்ன ?
விருதுநகரில் ஏற்பட்ட வெடி விபத்து 23 பேர் உயிரிழப்பு - அதிகாரிகள் சொல்வது என்ன ?
TVK Vijay: எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்
TVK Vijay: எம்மதமும் சம்மதம்! திருச்சி வாக்கு சேகரிப்புக்கு நடுவே வழிபாடு! மதநல்லிணக்கத்தை செயலில் காட்டிய விஜய்
Embed widget