கிழக்கு மத்திய வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 06 மணி நேரத்தில் மணிக்கு 15 கி.மீ வேகத்தில் வடக்கு-வடகிழக்கு நோக்கி நகர்ந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இன்று காலை கிழக்கு மத்திய வங்கக்கடலில் 17.8°N அட்சரேகைக்கு, தீர்க்கரேகை 89.7°E அருகே நிலைகொண்டுள்ளது. , Khepupara (வங்கதேசத்திற்கு தெற்கே 490 கி.மீ., சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்கம்) தென்-தென்கிழக்கே சுமார் 380 கி.மீ. மற்றும் கேனிங்கிலிருந்து (மேற்கு வங்கம்) தெற்கு-தென்கிழக்கே 530 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது இன்று மாலைக்குள் கிழக்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடலில் கிட்டத்தட்ட வடக்கு நோக்கி நகர்ந்து ஒரு சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இது தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, நாளை (மே 26) காலை வடமேற்கு மற்றும் அதை ஒட்டிய வடகிழக்கு வங்கக் கடலில் தீவிர சூறாவளி புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. தொடர்ந்து வடக்கு நோக்கி நகர்ந்து, அதன்பின்னர், நாளை நள்ளிரவு நேரத்தில், மணிக்கு 110-120 வேகத்திலும் சமயத்தில் மணிக்கு 135 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும். கடுமையான சூறாவளி புயலாக சாகர் தீவு மற்றும் கெபுபாரா இடையே வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய மேற்கு வங்க கடற்கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயலுக்கு REMAL என பெயர் சூட்டப்பட்டுள்ளது. ரெமல் என்றால் அரபு மொழியில் மண் என்று அர்த்தம். ஓமன் நாடு இந்த பெயரை பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. இது அதி தீவிர புயலாக வலுப்பெற்று கரையை கடக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் முதல் புயல் வங்கக்கடலில் உருவாகியுள்ளது. தக்ஷின் (தெற்கு), 24 பர்கானா, பூர்பா மேதினிபூர், ஹவுரா, ஹூக்லி, கொல்கத்தா மற்றும் நாடியா உள்ளிட்ட பகுதிகள் இந்த புயலினால் பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.