இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் ஜி.எஸ்.எல்.வி எப்.12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை சரியாக காலை 10.42 மணிக்கு ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.  


ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள்கள்:  


இஸ்ரோ 2020 ஆம் முதல் கடந்த ஆண்டு வரை ஆண்டுக்கு 2 செயற்கைக்கோள் மட்டுமே விண்ணில் செலுத்தியது. இந்த ஆண்டு மூன்றாவது செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். பிரிவில் 1ஏ, 1பி என மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.


இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் ஜூலை 2013-ம் ஆண்டு, ஏப்ரல், அக்டோபர் 2014-ம் ஆண்டு, மார்ச் 2015-ம் ஆண்டு , ஜனவரி 2016-ம் ஆண்டு மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.




இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும். இந்த செயற்கைக்கோள் 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், இன்று இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது.


பயன்பாடுகள் என்ன?


என்விஎஸ்-01 செயற்கைக் கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.  


அடுத்தடுத்த திட்டங்கள் என்ன?


இதே திட்டத்துடன் இஸ்ரோ தனது முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யாவின் முதல் சோதனை திட்டம் ஆதித்யா-எல் 1 இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில் விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.


அதுமட்டுமல்லாமல் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலவின் தென் திருவத்தை ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்பட்ட சந்திரயான் - 3  வரும் ஜூலை மாதம் 12 ஆம் தேதி விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. இந்த முறை எந்த தொழில்நுட்பக் கோளாறும் ஏற்படாத வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இதற்காக ஏற்கனவே இரண்டு முறை சோதனை ஓட்டம் செய்யப்பட்டுள்ளது.


Gold Silver Rate Today 29 May 2023: செம்ம ஹேப்பி நியூஸ்...தொடர்ந்து குறையும் தங்கம் விலை...! இன்று எவ்வளவு குறைந்திருக்கு...?