பெண்களின் மகப்பேறு காலத்தில் 9வது மாதத்தில் எப்போது வேண்டுமென்றாலும் பிரசவ வழி வருவது வழக்கம். அந்த சமயத்தில் அவர்களை விரைவாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டியது அவசியம். ஆனால் ஒரு சில நேரங்களில் அவர்கள் எதிர்பாராத நேரத்தில் பிரசவ வழி வந்துவிட்டால் மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக சிலருக்கு குழந்தை பிறந்துவிடும். அப்படி ஒரு சம்பவம் தான் தற்போது நடைபெற்றுள்ளது. 


தெலங்கானா மாநிலத்தின் அடிலாபாத் பகுதியின் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பெண் ஒருவருக்கு பிரசவ வழி ஏற்பட்டுள்ளது. அப்போது பேருந்தில் இருந்த அப்பெண்ணின் உறவினர்கள் மற்றும் சக பயணிகள் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளதாக தெரிகிறது. அவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அதன்பின்னர் பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவரும் 108 ஆம்புலன்ஸை தொடர்பு கொண்டுள்ளனர். எனினும் அவை எதுவும் சரியான நேரத்திற்கு வரவில்லை.


இதைத் தொடர்ந்து பேருந்து ஓட்டுநர் அருகே இருக்கும் ஒரு ஆரம்ப சுகாதார மையத்திற்கு பேருந்தை ஓட்டியுள்ளார். அங்கு அந்தப் பெண் மற்றும் அவருக்கு பிறந்த குழந்தையை சேர்த்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்தவுடன் அடிலாபாத் போக்குவரத்து கழக மேலாளர் விஜய் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று பார்த்து வாழ்த்துகளை தெரிவித்தனர். அத்துடன் அந்தக் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும் பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் பாஸையும் வழங்கியுள்ளனர். 




மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்தவர் ரத்னாலா. இவர் தெலங்கானா மாநிலத்திற்கு தன்னுடைய 3 குழந்தைகள் மற்றும் உறவினர்களுடன் சென்றுள்ளார். அங்கு அவர் அங்கு இருந்து மகாராஷ்டிராவின் எல்லை கிராமமான சந்தர்பூர் செல்ல பேருந்தில் பயணம் செய்துள்ளார். அப்போது சரியாக 11.35 மணிக்கு இந்தப் பெண்ணிற்கு குழந்தை பிறந்துள்ளது தெரியவந்துள்ளது. 


 


இந்தச் சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த போக்குவரத்து மேலாளர் விஜய், “இந்தப் பேருந்தை இயக்கியை ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகிய இருவருக்கும் என்னுடைய பாராட்டுகளை தெரிவிக்கிறேன். மக்களுக்கு எப்போதும் ஆதரவாகவும், நண்பர்களாகவும் போக்குவரத்துறை ஊழியர்கள் செயல்பட்டு வருகின்றனர். அதற்கு இந்தச் சம்பவம் ஒரு முக்கியமான சான்று” எனத் தெரிவித்துள்ளார். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண