ஆசிரியர்கள் தாங்கள் விரும்பிய, வசதியான ஆடைகளை அணியலாம் என கேரள அரசு அறிவித்துள்ளது. மேலும், ஆசிரியர்களுக்கு ஆடைக் கட்டுப்பாடு தொடர்பாக ஓர் அரசாணை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் உள்ள பல்வேறு கல்வி நிலையங்களில் பணியாற்றும் பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள், கல்லூரி விரிவுரையாளர்கள் சேலை அணிந்து வர வேண்டும் எனக் கட்டாயப்படுத்தப்படுத்துவதாக தொடர்ந்து புகார்கள் வந்தன.
இதையடுத்து, கேரள உயர் கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்து ஓர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில், பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை என்று தெரிவித்தார். அமைச்சர் ஆர்.பிந்துவும் ஒரு கல்லூரிப் பேராசிரியராகத்தான் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் பணிக்குச் செல்லும்போது சேலைக்குப் பதிலாக சுடிதார் அணிந்துதான் சென்றார். இது குறித்து இணைச் செயலாளர் சாஜூ குமார், , பெண் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் ஆடை அணிவதில் கட்டுப்பாடில்லை.
இது தொடர்பாக அமைச்சர் ஆர்.பிந்து ஓர் விளக்க அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில் “பலமுறை கேரள அரசு பலமுறை தனது நிலைப்பாட்டைப் பெண்களின் ஆடை விஷயத்தில் தெளிவுபடுத்திவிட்டது. ஆசிரியைகள் ஆடைகளைத் தேர்ந்தெடுத்து, தங்கள் உடல் வசதிக்கு ஏற்பவும், கல்வி நிறுவனத்துக்கு ஏற்பவும் அணிய உரிமை உண்டு.
ஆசிரியைகள் சேலை அணிந்து வர வேண்டும் என்பது கேரளாவில் ஒருபோதும் கட்டாயமில்லை.
கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கு ஏராளமான பொறுப்புகள் உண்டு. அதை மட்டும் கவனித்தால் கல்வித்தரம் உயரும். அதனால் மாணவர்களுக்கு நன்மை உண்டாகும்.
மகாராஷ்ட்ராவில் 26 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொலை: தலைவரும் கொல்லப்பட்டதாக தகவல்!
அதைவிடுத்து இதுபோன்ற கால, சூழலுக்கு உதவாத, மாற்றத்தை ஏற்காத சிந்தனைகளை ஏற்க வேண்டிய அவசியம் கிடையாது. ஒருவர் ஆடை தேர்வு என்பது அவரவரின் தனிப்பட்ட விருப்பம், முடிவு. இதில் அவரின் ஆடை விஷயத்தை விமர்சிக்கவோ, தலையிட்டுக் கருத்து கூறவோ யாருக்கும் உரிமையில்லை.
கேரள அரசு இது தொடர்பாக 2014 ஆம் ஆண்டு மே 9 ஆம் தேதி விரிவான அரசாணையும் பிறப்பித்துள்ளது. மேலும், கூடுலாத இந்த அரசாணையையும் பிறப்பிக்கிறோம். கேரளா போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட மாநிலத்தில் ஆசிரியைகள் சேலை அணிந்து வரவேண்டும் என்ற கட்டாயப்படுத்தக் கூடாது” என தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்